உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த எல்ஐகே சீமான்.. என்ன இப்படி இறங்கிட்டாரு?

சென்னை: இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் வந்த சீமான் அடுத்ததாக நடிகராக மாறினார். நிலைமை இப்படி இருக்க ஈழ படுகொலையால் ரொம்பவே வேதனைப்பட்ட அவர்; அரசியல் களத்தில் இறங்கினார். இப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் காரைக்குடி தொகுதியில் போட்டியிடவிருக்கிறார். இந்நிலையில் அவர் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரோல் ஆகியிருக்கிறது.

மணிவண்ணம், பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து; பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் சீமான். அந்தப் படத்தில் வடிவேலுவின் காமெடி உள்ளிட்ட விஷயங்கள் கைகொடுக்க படம் ஓரளவுக்கு கவனத்தை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் வீரநடை திரைப்படத்தை இயக்கினார். அதில்தான் மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. அடுத்ததாக இயக்கிய தம்பி படம்தான் சீமானுக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

Seeman s Campaign Kiss Video Sparks Debate Ahead of Tamil Nadu Elections
Photo Credit:

பிரபாகரன் நினைவாக: அந்தப் படத்துக்கு தம்பி என்று பெயர் வைக்கப்பட்டதற்கு காரணமே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனை அப்படித்தான் அழைப்பார்கள் என்பதால்தான். மாதவன் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட் ஆனது. அதில் சீமான் எழுதிய வசனங்கள், எடுத்துக்கொண்ட கதைக்களம் என அத்தனையும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தார்கள். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் மாதவனை வைத்து வாழ்த்துகள் படத்தை இயக்கினார். அந்தப் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. அப்படத்தில் வசனங்கள் எல்லாம் தூய தமிழில் இருந்ததே தோல்விக்கு காரணம் என கருதப்படுகிறது.

Also Read
சாதி, மதமற்றவர் என சான்றிதழ்.. பார்த்திபனுக்கு மகிழ்ச்சி.. அணிந்து வந்த NO கண்ணாடிதான் ஹைலைட்
சாதி, மதமற்றவர் என சான்றிதழ்.. பார்த்திபனுக்கு மகிழ்ச்சி.. அணிந்து வந்த NO கண்ணாடிதான் ஹைலைட்

அரசியலில் மும்முரம்: சீமான் திரைத்துறையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலத்தில்தான் ஈழ படுகொலை நடந்தது. அதனை பார்த்து கொதித்தெழுந்த அவர் சில முறை கைதும் ஆகியிருக்கிறார். மேலும் நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து பயணித்த அவர்; அந்த இயக்கத்தை நாளடைவில் கட்சியாக மாற்றி அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மாறினார். அப்போதிருந்து இப்போதுவரை திராவிடத்தையும், திராவிட கட்சிகளையும் சகட்டுமேனிக்கு விளாசிவருவது கவனிக்கத்தக்கது.

எல்ஐகேவில் சீமான்: அரசியல் காரணமாக சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாகவே ஒதுங்கியிருந்தார். அவ்வப்போது நல்ல திரைப்படங்களை பார்த்து விமர்சனமும் கொடுப்பார். சூழல் இப்படி இருக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான எல்ஐகே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடித்திருந்தார். படம் சுமார் வரவேற்பையே பெற்றது. சீமானுக்கும் பெரிய பெயர் எதுவும் கிடைக்கவில்லை. அதேசமயம் அவரது நடிப்பு கொஞ்சம் கவனத்தை ஈர்ப்பதாகவே இருந்தது.

உதட்டோடு உதடு முத்தம்: அவர் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் களம் கண்டிருக்கிறார். மேலும் தன் கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி சுழன்று பிரசாரம் செய்துவருகிறார். அந்தவகையில் பரப்புரையின்போது அவரை சிறுவன் சந்திக்க வந்தார். அந்த சிறுவனை கட்டியணைத்த சீமான் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார். உடனே அந்த சிறுவன் தனது உதட்டினை துடைத்து அங்கிருந்து சென்றுவிட்டான். அதேபோல் மற்றொரு பரப்புரையின்போது ஒரு பெண்ணுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Read more about: seeman சீமான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X