AK - SK குடும்பத்தை உன் தொண்டர்கள் என்னல்லாம் பேசியிருக்காங்க தெரியுமா? விஜய்யை விளாசிய சீமான்!
சென்னை: நடிகர் விஜய் தனது ரசிகைகள் மற்றும் பெண் தொண்டர்களை, அரசியல் விமர்சகர் பொன்ராஜ் அவமரியாதையாக விமர்சித்து விட்டார் என்று டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இது மார்ச் மாதம் 26ஆம் தேதி மாலை நடைபெற்றது. இந்நிலையில் விஜய் புகார் கொடுத்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது விமர்சனத்தை மிகவும் காட்டமாகவும், ஆதாரத்துடன் விமர்சித்துள்ளார்.
பிரச்சாரத்திற்கு மத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், " பொன்ராஜ் அவர்கள் விமர்சித்தது என்பது ஆதங்கத்தின் வெளிப்பாடு. விஜய் மீது இருக்கும் பிரியத்தில் பேசும் சில பெண்களைப் பார்க்கும்போது, நமது பெண் பிள்ளைகள் இப்படி வளர்கிறார்களே என்ற ஆதங்கம் ஏற்படும். அதன் வெளிப்பாடு தான். சமூகத்தை நேசிக்கும் அனைவருக்குமே நமது அடுத்த தலைமுறை இவ்வளவு மோசமாக வளர்கிறதா என்ற கவலை வரும். இந்த கவலை விஜய்க்கும் வந்திருக்க வேண்டும்.

அப்படி வருத்தப்பட்டிருந்தால், ஒரு அறிக்கை வெளியிட்டு அதைக் கண்டித்து தவிர்க்கச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. விஜய்யின் கட்சியில் இருப்பவர்கள், என்னை, என் குடும்பத்தை, தம்பி சிவக்கார்த்திகேயன் குடும்பத்தை, நடிகர் அஜித் குடும்பத்தை மிகவும் மோசமாக விமர்சித்தார்கள். விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் என இருவரும் கட்டிப் பிடித்து நிற்பது போல புகைப்படங்களை உருவாக்கி விஜய் ரசிகர்கள் எழுதுகிறார்கள். இது போன்ற பதிவுகளை நானே பார்க்கும் போது, அவர் பார்த்திருக்க மாட்டாரா? விஜய் ஏன் அதைக் கண்டிக்கவில்லை?
அஜித் - சிவகார்த்திகேயன்: அப்படி கண்டித்திருந்தால், மோசமாக பேசிய தங்கைகள் அப்படி பேசும்போது தவறு என்று பலரும் சுட்டிக் காட்டுவதைப் போல தவறு என்று சொல்லி இருந்தால் பொன்ராஜ் ஐயா மீது புகார் கொடுக்கச் சென்றீர்கள் அல்லவா அதற்கு தகுதியும் நேர்மையும் இருந்திருக்கும். என்னை, என் மனைவியை, சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் மனைவி, மகள், அஜித், அஜித்தின் மனைவி, அஜித்தின் மகளை உங்கள் ரசிகர்கள் மோசமாக பேசும் போது எங்கே இருந்தீர்கள்?

ஆதங்கம்: உங்கள் கட்சிக்காரர்கள் மற்ற பெண் கட்சி பெண் நிர்வாகிகளை, பெண்களை மோசமாக பேசிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு உங்கள் மீது புகார் கொடுத்தால் எப்படி இருக்கும்? பொன் ராஜ் ஐயா மனதில் வைத்திருக்க முடியாமல் ஆதங்கத்தை கொட்டிவிட்டார், மற்றவர்கள் வெளிக்காட்டவில்லை. ஆதங்கத்தோடு பொன்ராஜ் ஐயா வெளிக்காட்டியது குற்றம் என்றால், எங்களை நோக்கத்தோடு அவமானப்படுத்தும் தவெகவினர் செய்வது குற்றம் தானே? அதற்கு என்ன செய்யலாம்.
பெண்கள் ஆதரவுக்காக: விஜய் புகார் அளிக்க என்ன காரணம்? சமீபத்தில் அவரைச் சுற்றி நடந்தது எல்லாம் பெண்களுக்கு எதிராக என்பதால் தற்போது பெண்கள் மத்தியில் ஆதரவைப் பெற இவ்வாறு செய்கிறார். உண்மையிலேயே பெண்கள் மீது அக்கறை இருந்தால், அவரோ அல்லது அவரது கட்சியின் சார்பிலோ யாராவது அதைக் கண்டித்து அன்பு வேறு, அதை வெளிப்படுத்த அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று கூறியிருக்க வேண்டும். அதை செய்யவில்லை புகார் கொடுக்க போகிறார்" என்று காட்டமாக பேசி உள்ளார். இவரது பேச்சு சரியானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











