Seeman speech : வெற்றிமாறன் ஓர் மிருகம்.. சீமானின் பேச்சால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் மனித வடிவில் இருக்கும் ஓர் மிருகம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் பேசி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் வெளியாகி இன்று வரை அரங்கு நிறைந்த காட்சிகளாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

விடுதலை : ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. இப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், விடுதலை படம் தொடங்கும் போதே இது எந்த கதையின் தழுவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

seeman speech about director vetrimaarans Viduthalai movie

குமரேசனாக சூரி : இப்படத்தில் சூரி, குமரேசன் என்ற கேரக்டரில் படம் முழுக்க அதிரடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஆரம்பக்காட்சியான ரயில் விபத்து காட்சியிலேயே அதிரடியாக ஸ்கோர் செய்துவிட்டார் வேல்ராஜ்.

பாராட்டிய ரஜினி : வசூலை அள்ளி வரும் விடுதலை படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், விடுதலை படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வெற்றிமாறன், சூரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து படம் மிகவும் அருமையாக இருப்பதாக பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் டிராண்டானது.

seeman speech about director vetrimaarans Viduthalai movie

சீமான் பேச்சு : இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில், பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா என தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்பாளிகள் இருந்தனர். அந்த வரிசையில் ராம், வெற்றிமாறன் போன்றவர்கள் சிறந்த படங்களை கொடுத்துக் கொண்டு வருகின்றனர். உலகப்படம் ,ஆங்கிலப்படம் என்று சொல்லுவோம் அதை மிஞ்சும் வகையில் நம்மிடத்திலும் ஆள் இருக்கிறது.

seeman speech about director vetrimaarans Viduthalai movie

வெற்றிமாறன் ஓர் மிருகம் : படம் பார்த்த எல்லாருக்கும் இப்படி ஒரு உழைப்பை கொடுக்க முடியுமா என்று தான் நினைக்கத்தோன்றும், யாரும் எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார். அசுரன் படம் பார்த்துவிட்டு திகைத்து போனோம். இந்த படம் பத்து மடங்கு அசுரனுக்கு சமமான படமாக இருக்கு, விடுதலை போன்ற ஒரு திரைப்படத்தை எடுக்க கடும் உழைப்பை கொட்ட வேண்டும். அதனை வெற்றிமாறன் செய்துள்ளார். காட்டுக்குள் பயணித்து மலை ஏறி கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார். மனித வடிவில் இருக்கும் மிருகம் வெற்றிமாறன். அதனால் தான் அதே வெறியில் படத்தை எடுத்திருக்கிறார் என்று சீமான் அவரை வெகுவாக பாராட்டி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X