விஜய் வீட்டில் நடந்த ரெய்டு.. அவரை பயமுறுத்ததான் .. சீமான் கண்டனம்!

Recommended Video

விஜய்-யை பத்தி பேச அர்ஜுன் சம்பத்துக்கு என்ன தகுதி இருக்கு | அமீர் ஆவேசம்

சென்னை : விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையும் அவரை இரண்டு நாட்கள் வீட்டு காவலில் வைத்ததும் அவரை பயமுறுத்ததான் என்று சீமான் கூறியுள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான சீமான் அரசியல் கட்சியை துவங்கிய பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். இதனால் படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் குறைத்து விட்டார். இருந்தும் பல இடங்களில் சினிமாக்குள் நடக்கும் பிரச்சினைகளை பற்றி எப்போதும் அவரின் கருத்தை பகிர்ந்து வருகிறார்.

 Seeman support for Vijay

அப்படி சமீபத்தில் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரைட்டு பற்றி இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது இதற்கு சீமானும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையும் அவரை இரண்டு நாட்கள் வீட்டு காவலில் வைத்து இருந்ததும் அவரை பயமுறுத்ததான் என்று அர்த்தம் கூறியுள்ளார்.

ரஜினி மீதும் வருமான வரி புகார் வந்தது. ஆனால் ரஜினிக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை விஜய்க்கு வந்ததற்கு பின்னணி அவரையும் ரஜினி போல பேச வைக்க முயல்கிறார்கள் என்று சீமான் கூறியுள்ளார்.

 Seeman support for Vijay

மேலும் ரஜினி மத்திய அரசின் ஆதரவாக செயல்படுவதால் தான் நாங்கள் அவரை எதிர்க்கிறோம் என மறைமுகமாக கூறியுள்ளார். அவருக்கு யாரும் காவி சாயம் பூச வேண்டாம் அவருக்கு அவரே பூசி கொண்டார் என்றும் விமர்சித்துள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி மேல் மதமாற்றம் குற்றச்சாட்டு எழும்பியது. இதற்கு விஜய் சேதுபதியே ட்விட்டர் வாயிலாக வேற வேலை இருந்தா பாருங்கடா என்று பதில் அளித்து விட்டார். இதற்கும் தன் கருத்தை பகிர்ந்து இருக்கிறார் சீமான் .விஜய்சேதுபதிக்கு ஆதரவான நிலையில் பேசியுள்ள சீமான் விஜய் சேதுபதி மேல் ஏற்பட்ட புகார் ஏற்புடையதல்ல இந்த நாட்டில் அவரவருக்கு அவர்களின் விருப்பம் போல வாழ உரிமை உண்டு என்றும் கூறியுள்ளார் .

 Seeman support for Vijay

இயக்குனர் சீமான் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிம்புவை வைத்து படம் இயக்க போவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரையில் எந்த தகவலும் படத்தை பற்றி வரவில்லை .

சீமான் கடைசியாக மிக மிக அவசரம் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கி இருந்தது குறிப்பிடதக்கது. மேலும் அந்த படம் பெண் போலீஸ்களின் வாழ்க்கை பற்றியும் அதன் கடினத்தையும் எடுத்துரைத்திருந்த படமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X