இந்த வயசுல உனக்கு ஐஸ்வர்யா ராய் ஜோடி கேக்குது?.. கலாய்த்த சீமானுக்கு சரத்குமார் கொடுத்த தக் லைஃப்

சென்னை: சரத்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். வில்லனாக சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்த அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்போது குணச்சித்திர வேடத்தில் கலக்கிவருகிறார். முதலில் சாயா என்பவரை திருமணம் செய்து பிரிந்த அவர் அடுத்ததாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் சரத்குமார் குறித்து சீமான் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கோலிவுட் ரசிகர்களால் சுப்ரீம் ஸ்டார் கொண்டாடப்படுபவர் சரத்குமார். முதலில் வில்லனாக அறிமுகமான அவர்; அதற்கு பிறகு ஹீரோவாக ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக்கொண்டார். அவர் ஹீரோவாக நடித்த சேரன் பாண்டியன், சூரியன், நாட்டாமை, சூரிய வம்சம், இந்து, மூவேந்தர், பாட்டாளி, மாயி என பல ஹிட் படங்களில் நடித்து 90களில் மினிமம் கியாரன்டி ஹீரோ என்ற இடத்தை பிடித்துக்கொண்டார். அதுமட்டுமின்றி விக்ரமுடன் விண்ணுக்கு மண்ணுக்கும், பிரபுதேவாவுடன் பெண்ணின் மனதை தொட்டு போன்ற படங்களில் கெஸ்ட் ரோலாகவும் கலக்கியவர்.

இரண்டு திருமணங்கள்: அவர் முதலில் சாயா தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் இப்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக கலக்கிவரும் வரலட்சுமி. சாயாவுடன் சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த சரத் சில காரணங்களால் அவரை பிரிந்தார். அவரை பிரிந்த பிறகு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

Seeman Trolls Sarathkumar for pairing up with Aishwarya Rai

முதல் மனைவியும் நடிகை: சரத்குமாரின் மகளை போல் முதல் மனைவி சாயா தேவியும் நடிகையாக மாறியிருக்கிறார். பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தில் அறிமுகமானார். அவரது நடிப்பு ஓரளவுக்கு வரவேற்பைதான் பெற்றிருந்தது. கண்டிப்பாக தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சாயாவுடனான திருமண உறவிலிருந்து சரத்குமார் வெளியே வந்திருந்தாலும்; அவருக்கு தேவையானதை சரத் செய்கிறார் என்பதையும், ராதிகாவும், சாயாவும் ஒற்றுமையோடு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குணசித்திர நடிகர் சரத்குமார்: இதற்கிடையே ஹீரோவாக கலக்கிவந்த சரத்குமார் இப்போது குணசித்திர வேடங்களில் பட்டையை கிளப்பிவருகிறார். வானம் கொட்டட்டும், வாரிசு, போர் தொழில் என ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போதும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அவரது கைவசம் எக்கசக்க படங்கள் இருக்கின்றன. ஹீரோவாக எப்படி பலரையும் கவர்ந்தாரோ அதேபோல் குணசித்திர நடிகராகவும் பலரை கவர்ந்திருக்கிறார் அவர்.

பெரிய பழுவேட்டரையர்: சரத்குமார் நடித்த குணசித்திர கதாபாத்திரங்களில் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்றிருந்த பெரிய பழுவேட்டரையர் கேரக்டர் முக்கியமானது. கல்கி எழுதிய நாவலில் வரும் அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே தனது நடிப்பாலும், உடல் மொழியாலும் திரையில் கொண்டு வந்து நிறுத்தினார். அவருக்கு அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் ஜோடி. இந்நிலையில் சரத்குமார் குறித்து சீமான் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

என்ன பேசினார்?: அதாவது பரமசிவன் பாத்திமா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "சரத்குமாரை நான் அண்ணன் என்றுதான் அழைப்பேன். நாங்கள் ரொம்பவே நெருக்கம். பொன்னியின் செல்வன் பட சமயத்தில் விமான நிலையத்தில் அவரை சந்தித்தேன். அப்போது நான் அவரிட, 'உனக்கு இந்த வயசுல ஐஸ்வர்யா ராய் ஜோடி கேக்குதா?' என்று கேட்டேன். அதற்கு அவரோ, 'உனக்கு பொறாமை டா' என்று கூறினார். உடலை நல்லபடியாக வைத்துக்கொண்டால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X