அணிலே அணிலே ஓரமா விளையாடு.. விஜய்யை கிண்டல் செய்த சீமான்.. கண்டித்த தவெக தொண்டரையும் தாக்கினாரா?
சென்னை: சினிமாவில் பிஸியாக நடித்துவந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். திரைத்துறையில் முத்திரை பதித்தது போன்று அரசியலிலும் ஜொலிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அவரது டார்கெட் ஆளுங்கட்சியான திமுகவாகத்தான் இருக்கிறது. இன்னும் சில நாட்களில் மதுரையில் அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடக்கவிருக்கும் நிலையில்; சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இடத்தை திரைத்துறையில் அடுத்து பிடிப்பவராக விஜய் அவரது ரசிகர்களால் கருதப்பட்டார். தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி நலத்திட்ட உதவிகள் செய்துவந்த அவர்; இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களம் காணவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் விஜய்: அரசியலில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும் அறிவித்திருக்கிறார். அந்தப் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படம் ரிலீஸ். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே என பலர் நடிக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படம் தரமான சம்பவமாக இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.
திமுகதான் டார்கெட்: சினிமாவில் ரஜினி இடத்தை பிடிப்பார் என்று பார்த்தால்; கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது விஜய்க்கும். எனவேதான் அரசியல் என்ட்ரி. அரசியலுக்குள் வந்ததுமே திமுகவை தனது டார்கெட்டாக ஃபிக்ஸ் செய்தார். கிடைக்கும் விஷயங்களில் எல்லாம் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். அதற்கு திராவிட முன்னேற்ற கழகத்தினரும் தகுந்த பதிலடியை கொடுத்துதான் வருகிறார்கள்.

இடையில் சீமானும்: இதற்கிடையே திராவிட கட்சிகளை ஒழித்தே கட்டுவேன் என பல வருடங்களாக களமாடிவரும் சீமானும் விஜய்யை அவ்வப்போது எதிர்த்துவருகிறார். முக்கியமாக ஒன்று இடது பக்கம் நில்லுங்கள் இல்லை வலது பக்கம் நில்லுங்கள்; இரண்டும் இல்லாமல் நடுவில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்துவிடுவீர்கள் என தவெகவின் கொள்கை நிலைப்பாடு குறித்து அவர் விமர்சித்திருந்தர். இந்நிலையில் சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் தவெகவினரை கலாய்த்து தள்ளிவிட்டார்.
என்ன பேசினார்?: அந்த பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், "தவெகவினரிடம் சென்ற் உங்கள் கொள்கை என்னவென்று கேட்டால் தளபதி தளபதி என்று சொல்வார்கள். அப்படி அவர்கள் கத்தினால் எனக்கு தலைவிதி தலைவிதி என்று கேட்கிறது. சரி இது போகட்டும் எதற்காக அரசியலுக்கு வந்தீர்கள் என கேட்டால் TVK, TVK என சொல்கிறார்கள். எனக்கு டீ விற்க என்பது போல் கேட்கிறது. டீ விற்பது என்றால் அந்தப் பக்கம் ஓரமாக போய் விற்க வேண்டியதுதானே.
தாக்கினாரா சீமான்?: புலி வெறிகொண்டு வேட்டையாடிக்கொண்டிருக்கும்போது இந்த அணில் குறுக்க மறுக்க ஓடுகிறது. காட்டு மாடை, ஆடை, மானை வேட்டையாடினால் புலிக்கு மரியாதை. அணிலை வேட்டையாடினால் என்ன மரியாதை. இவர்களை பார்க்கும்போது அணிலே அணிலே ஓரமாக போய் விளையாடு என்றுதான் சொல்ல தோன்றுகிறது" என்றார். இதற்கிடையே அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது தவெக தொண்டர் என கருதப்படும் ஒருவர் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். அதனை சீமானும் கடந்து சென்றார்.
சூழ்நிலை இவ்வாறு இருக்க இன்னொரு வீடியோ ஒன்றும் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது மேடையில் இருந்த அவர் திடீரென கீழே இறங்கி தன் சொந்த கட்சிக்காரரையே தாக்கிவிட்டு; இன்னொருவரையும் தாக்குவது போன்று காட்சிகள் இருக்கின்றன. ஒருவேளை சீமானால் தாக்கப்பட்ட நபர் தவெக தொண்டராக இருப்பாரோ என்று கேள்விகள் பலரிடம் எழுந்திருக்கின்றன. முன்னதாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் பற்றியும், அவர்களை அரசு நடத்திய விதம் பற்றியும் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சென்னை மேயர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. படம் தோல்வி. அதனால்தான் அந்த கூலியும் (ரஜினி நடித்த படம்) காலி, இந்த கூலியும் காலி என கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











