'ஓபனிங் கிங்' ஆன சிவா: சீமராஜா முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

By Siva

Recommended Video

முதல் நாளிலே 13 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயன் சீமராஜா- வீடியோ

சென்னை: சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ. 13.5 கோடி வசூல் செய்துள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த சீமராஜா படம் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸானது. சில பிரச்சனையால் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

படம் வெளியாகுமா என்று ரசிகர்கள் பயந்த நிலையில் நேற்றே ரிலீஸானது.

ரூ. 13.5 கோடி

ரூ. 13.5 கோடி

காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட போதிலும், படம் ரிலீஸான அன்றே ஆன்லைனில் கசிந்த போதிலும் சீமராஜா நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ. 13.5 கோடி வசூல் செய்துள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 1 கோடி

ரூ. 1 கோடி

சீமராஜா படம் சென்னையில் மட்டும் நேற்று ரூ. 1 கோடி வசூல் செய்துள்ளது. சீமராஜா ரூ. 13.5 கோடி வசூல் செய்துள்ளது அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பலத்தை காட்டுகிறது. அவருக்கு குட்டீஸ்களின் ஆதரவும் அதிகம். ரெமோ, வேலைக்காரன் ஆகிய வெற்றிப் படங்களின் முதல் நாள் வசூலை சீமராஜா முந்தியுள்ளது.

வேலைக்காரன்

வேலைக்காரன்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் ரூ. 7.5 கோடி வசூல் செய்தது. அதற்கு முன்பு ரிலீஸான ரெமோ ரூ. 6 கோடி வசூலித்தது. படத்திற்கு படம் தனது வசூல் சாதனையை முறியடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ரஜினி, அஜித், விஜய்க்கு நிகராக ஓபனிங் வசூல் பெறுகிறார் சிவகார்த்திகேயன்.

விவேகம்

விவேகம்

வேலைக்காரன் படம் ரிலீஸான அன்று சென்னையில் ரூ. 89 லட்சம் வசூலித்தது. 2017ம் ஆண்டில் வெளியான படங்களில் விஜய்யின் மெர்சல்(ரூ. 1.5 கோடி), அஜித்தின் விவேகம்(ரூ. 1.21 கோடி) ஆகிய படங்கள் தான் ரிலீஸான நாளில் சென்னையில் அதிகம் வசூல் செய்த படங்கள். தற்போது ரூ. 1 கோடி வசூல் செய்ததன் மூலம் சிவகார்த்திகேயனும் ஓபனிங் கிங்காகியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X