டப்பிங்கை ஆரம்பித்த சிவகார்த்திகேயன்.. இன்று இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு!

By Vignesh Selvaraj

சென்னை : பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' ஆகிய படங்கள் வெளியாகி ஹிட் ஆனதையடுத்து மூன்றாவது படமாக உருவாகியிருக்கும் சிவகார்த்திகேயனின் 12-வது படம் 'சீமராஜா'.
இந்தப் படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

Seemaraja dubbing starts today

டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சிவகாா்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'சீமராஜா' படம் 2018 விநாயகா் சதுா்த்தியின் போது திரைக்கு வரலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

'சீமராஜா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டா் ரசிகா்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. லீ மேஜிக் லான்டர்ன் டப்பிங் ஸ்டூடியோவில் தமிழ், தெலுங்கு டப்பிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.

Seemaraja dubbing starts today

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X