சீமராஜா திருவிழா துவங்கிடுச்சு
சீமராஜா ரிலீஸை இப்போதே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் சீமராஜா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இப்போதே திரையரங்குகளில் பேனர் வைக்க துவங்கி விட்டனர். சீமராஜா படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 14 நாட்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சீமராஜா ரிலீஸை திருவிழாபோல கொண்டாட தயாராகிவிட்டனர்.
பொதுவாக ரஜினி, அஜித், விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ரசிகர்கள் அதை திருவிழா போல கொண்டாடுவார்கள். இப்போது அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் சேர்ந்துவிட்டார்.
இப்படி உற்சாக மிகுதியில் இருக்கும் ரசிகர்களுக்கு எனெர்ஜியூட்டும் விதமாக ஒரு தகவல் வந்துள்ளது. சீமராஜா திரைப்படத்தை போலந்து நாட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். போலந்து நாட்டில் சீமராஜா ரிலீஸ் ஆகும் திரையரங்குகள் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த், அஜித் படங்களுக்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் படம் போலந்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், யோகிபாபு, சூரி, மனோபாலா, கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











