என்னாது சீமராஜா வெற்றியா?: பாவம், பொன்ராமை போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சென்னை: சீமராஜா வெற்றி பெற்றுள்ளதாக இயக்குனர் பொன்ராம் அறிவித்துள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான சீமராஜா படம் ஹிட்டாகியுள்ளது.
ரிலீஸான முதல் நாளே தமிழகத்தில் மட்டும் ரூ. 13.5 கோடி வசூல் செய்தது.
பொன்ராம்
எங்கள் சீமராஜா திரைப்படத்தை திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்து ரசித்து ,தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியையும், வசூல் சாதனையையும் அளித்த ரசிகர்களுக்கும், ஊடக, பத்திரிகை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்று ட்வீட்டியுள்ளார் பொன்ராம்.
கலாய்
சீமராஜா படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரிலீஸாகி நல்ல வசூல் செய்து வருகிறது. இதை பொன்ராம் ட்வீட்டியதை பார்த்து அவர் பொய் சொல்கிறார் என்று சிலர் கலாய்க்கிறார்கள். அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெரிய சண்டையே நடந்து கொண்டிருக்கிறது.
சூர்யா
ஓடாத படத்திற்கு இப்படி ஒரு விளம்பரமா என்று சூர்யா ரசிகர்கள் தரப்பில் இருந்து கமெண்ட் வந்துள்ளது. வழக்கமாக சூர்யா ரசிகர்கள் இது போன்ற காரியங்களில் எல்லாம் ஈடுபட மாட்டார்களே.

சிவகார்த்திகேயன்
யார் என்ன சொன்னாலும் சீமராஜா படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்நிலையில் பொன்ராமின் ட்வீட் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சிவாவின் அசுர வளர்ச்சியை பார்த்து ஜீரணிக்க முடியாதவர்கள் தான் படம் பிளாப் என்று கதறுவதாக சி.கா. ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications