ரிலீஸான அன்றே ஆன்லைனில் கசிந்த சீமராஜா: என்னது இது விஷால்?
சென்னை: சிவகார்த்திகேயனின் சீமராஜா ரிலீஸான அன்றே ஆன்லைனில் கசிந்துவிட்டது.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த சீமராஜா படம் நேற்று வெளியானது. காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
சீமராஜா படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

சீமராஜா
சீமாராஜா படம் வெளியான அன்றே பல இணையதளங்களில் கள்ளத்தனமாக வெளியிடப்பட்டது. தியேட்டருக்கு சென்று படம் பார்க்காமல் பலரும் அந்த இணையதளங்களில் இருந்து டவுன்லோடு செய்துள்ளனர். இந்த பிரச்சனையை தீர்க்க விஷால் போராடி வந்தாலும் இன்னும் சரியான பலன் கிடைக்கவில்லை. கொஞ்சம் துரிதமாக செயல்படுங்க விஷால்.

தயாரிப்பாளர்
ஒரு திரைப்படத்தை எடுத்து வெளியிட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படாதபாடு படுகிறார்கள். ஒரு தாய் குழந்தையை பிரசவிப்பது போன்று தான் படத்தை எடுத்து வெளியிடுவது என்று பல இயக்குனர்களும் தெரிவித்தனர். அத்தகைய குழந்தையை பிறந்ததுமே கொல்வது போன்று படத்தை கள்ளத்தனமான ஆன்லைனில் வெளியிடுகிறார்களே.
மகிழ்ச்சி
திருட்டுத்தனமாக படம் ஆன்லைனில் வெளியானாலும் தியேட்டருக்கு செல்பவர்கள் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். சீமராஜா படம் முதல் நாளிலேயே நல்ல வசூல் செய்துள்ளது. இதை ட்விட்டரில் தெரிவித்து தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் தயாரிப்பாளர் ஆர்.டி ராஜா.

சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கதை இல்லை, மெதுவாக செல்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சீமராஜா செம விருந்தாக அமைந்துள்ளது. அவர்கள் படத்தை பார்த்துவிட்டு திருப்தி அடைந்துள்ளனர். அந்த திருப்தி தானே ஒரு கலைஞனுக்கு வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் சிவகார்த்திகேயனுக்கு உள்ளது. அதனால் அவர் குறைகளை பார்த்து கோபப்படப் போவது இல்லை.


Click it and Unblock the Notifications











