நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் பராக் பராக் வீடியோ
சென்னை: சீமராஜா திரைப்பட பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாகிறது.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சீமராஜா.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே சீமராஜா கொண்டாட்டங்கள் களைகட்ட ஆரம்பித்துவிட்டன.

பாடல்கள் வெளியாகி ஹிட் ஆகியுள்ள நிலையில், சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷும், இசையமைப்பாளர் டி.இமானும் சேர்ந்து பாடியுள்ள பராக் பராக் என்ற பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாக உள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்த பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.
Comments


Click it and Unblock the Notifications