வேலைக்காரன், ரெமோவிடம் தோற்றுப் போன சீமராஜா: நாளை சாமி வேறு வருகிறாரே!
Recommended Video

சென்னை: சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் வசூல் பெருமளவு குறைந்துவிட்டது.
சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் ரிலீஸான அன்று மட்டும் தான் அதிகம் வசூல் செய்துள்ளது. ரிலீஸான அன்று தமிழகத்தில் ரூ. 13.5 கோடி வசூல் செய்தது. ஆனால் அதன் பிறகு வசூலில் பெரும் அடி வாங்கி வருகிறது சீமராஜா.
திங்கட்கிழமையில் இருந்து வசூல் நிலவரம் மோசமாகிவிட்டது.

வசூல்
ஞாயிற்றுக்கிழமை ரூ. 6.46 கோடி வசூல் செய்த சீமராஜா திங்கட்கிழமை வெறும் ரூ. 1.93 கோடி தான் வசூலித்தது. படம் வெளியான நான்கு நாட்களில் ரூ. 33.21 கோடி வசூல் செய்துள்ளது. படம் ரிலீஸான நான்கு நாட்களிலேயே அதன் மீதான மவுசு குறைந்துவிட்டது. சென்னை பாக்ஸ் ஆபீஸிலும் சீமராஜா அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

பாக்ஸ் ஆபீஸ்
சீமராஜா ரிலீஸான அன்று சென்னையில் ரூ. 1 கோடி வசூலித்தது. ஆனால் படம் வெளியான நான்கு நாட்களில் சென்னையில் ரூ. 3.28 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 75 லட்சமும், திங்கட்கிழமை ரூ. 27 லட்சமும் வசூலித்துள்ளது. சிவகார்த்திகேயனின் நடிப்புத் திறமையை பொன்ராம் சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

விமர்சனம்
முதல் பாதி முடிந்தும் கதையே இல்லையே என்று பலரும் விமர்சித்தனர். திரைக்கதை மற்றும் இயக்கம் எதிர்பார்த்தது போன்று இல்லை என்று கூறப்பட்டது. இந்த நெகட்டிவ் விமர்சனம் தான் படத்தின் வசூலை பாதித்துள்ளது. விக்ரமின் சாமி ஸ்கொயர் படம் நாளை ரிலீஸாக உள்ளது. அந்த படம் ரிலீஸானால் சீமராஜாவின் வசூல் வேட்டை கிட்டத்தட்ட நின்றுவிடும் அபாயத்தில் உள்ளது.

ரெமோ
வார இறுதிநாட்களில் அமெரிக்காவில் 110 ஸ்கிரீன்களில் சீமராஜா ரூ. 50.15 லட்சம் வசூல் செய்துள்ளது. ஆனால் இது வேலைக்காரன்(50 ஸ்க்ரீன்களில் ரூ. 1.18 கோடி) மற்றும் ரெமோ(70 ஸ்கிரீன்களில் 96.81 லட்சம்) ஆகிய படங்களின் வசூலை விட குறைவு ஆகும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் வேலைக்காரன், ரெமோவை விட சீமராஜா குறைவாகவே வசூல் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











