சீமராஜா ட்ரெய்லரில் வந்த காட்சி விஜய் படத்தில் இருந்து சுட்டதா?

By Siva

சென்னை: சிவகார்த்திகேயனின் சீமராஜா ட்ரெய்லரில் வரும் ஒரு காட்சி விஜய் படத்தில் இருந்து காப்பியடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள சீமராஜா படம் வரும் 13ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் மாஸாக உள்ளார்.

காப்பி

காப்பி

ட்ரெய்லரில் இரண்டு குதிரைகள் காலைத் தூக்கி மரியாதை செய்ய சிவகார்த்திகேயன் கெத்தாக நிற்கும் காட்சி அப்படியே விஜய்யின் மெர்சலில் உள்ளது. மெர்சல் படத்தில் இரண்டு வெள்ளைக் குதிரைகள் காலைத் தூக்க விஜய் வேட்டியை மடித்துக் கட்சி மாஸ் காட்டினார். தற்போது சீமராஜா காட்சியை பார்த்தால் மெர்சல் விஜய் தான் நினைவுக்கு வருகிறார்.

 கிண்டல்

கிண்டல்

வழக்கமாக அட்லி அங்கிருந்து சுட்டார், இங்கிருந்து சுட்டார் என்று சிலர் கிண்டல் செய்வது உண்டு. தற்போது அவர் படத்தில் இருந்தே காட்சியை சுட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சிவகார்த்திகேயனும், பொன்ராமும் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

 ஆவல்

ஆவல்

காப்பி குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் ட்ரெய்லரின் இறுதியில் சிவகார்த்திகேயன் போர் வீரன் போன்று வரும் காட்சி ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளது. சீம'ராஜா' ராஜா கதையா?. சிவகார்த்திகேயன் தான் அந்த ராஜாவா, அய்யோ படத்தை உடனே பார்க்க வேண்டும் போல உள்ளதே என்று சிவா ரசிகர்கள் ஆவலில் துடிக்கிறார்கள்.

 வில்லி

வில்லி

சீமராஜா படத்தில் சிம்ரன் வில்லி என்கிறார்கள். மெலிந்து காணப்படும் அவரை பார்த்தால் வில்லி ஃபீலிங்கே வரவில்லை. சாரி சிம்ரன், உங்களிடம் வில்லிக்கான கெத்து இல்லை என்பதே உண்மை. சிம்ரன் ஆவேசமாக வசனம் பேசுவதை பார்த்தால் உடம்புக்கு சரியில்லையா, டாக்டரை பார்க்கலாமே என்று பரிதாப்படத் தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X