சீமராஜாவுக்கு வந்த சோதனை... 5 மணி காட்சிகள் திடீர் ரத்து... ரசிகர்கள் ஏமாற்றம்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா திரைப்படத்தின் அதிகாலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

24 ஏ.எம். ஆர்.டி.ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. பொன்ராம் இயக்கியுள்ள இத்திரைப்படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

Seemaraja shows cancelled

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 400 தியேட்டர்களில் படம் வெளியாகும் என கூறப்பட்டது. பல தியேட்டர்களில் அதிகாலை 5 மணி காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஆன்லைன் மூலம் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் தியேட்டர்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு போடப்படுவதாக இருந்த காட்சிகள் அனைத்தும் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

வேலைக்காரன் பட வியாபாரத்தின் போது இருந்த நிலுவைத் தொகை 15 கோடி ரூபாயை திருப்தி தருவதில் பட தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டதே பட ரிலீஸ் தள்ளிப்போனதற்கு காரணம் என கூறப்படுகிறது. சீமராஜா படத்தின் சாட்டிலைட்ஸ் உரிமத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை காண்பித்தும் கூட பைனான்சியர்கள் ஒத்துக்கொள்ளவில்லை எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

எனவே சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படம் திட்டமிட்டப்படி இன்று வெளியாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X