twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எட்டு கோடிப்பு, சீமராஜா செட்டு மட்டும் எட்டு கோடிப்பு: நீங்க படத்த பாருங்க தெரியும்

    |

    சென்னை: அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சீமராஜா திரையிடப்படுகிறது.

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் நெப்போலியன், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. இப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

    Seemaraja US release!

    மற்ற நடிகர்களுக்கு இல்லாத அளவிற்கு மாபெரும் ஓபனிங் சிவகார்த்திகேயனுக்கு இப்படம் மூலம் கிடைத்துள்ளது. போலந்து உள்பட பல வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகும் இப்படம், அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. கொலம்பியா, லாஸ் வேகாஸ் என பல இடங்களில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

    இப்படம் இரண்டு காலகட்டங்களில் நடக்கும் வகையில் கதையமைக்கப்பட்டுள்ளது. பழங்காலக் கதையில் சிவகார்த்திகேயன் மன்னராக நடித்துள்ளார். அதற்கான அரண்மனையை மகாபலிபுரம் அருகே செட் போட்டு படமாக்கியுள்ளனர்.

    தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் கதையை குற்றாலம் அருகே செட் போட்டு படமாக்கியுள்ளனர். மன்னர் காலக் கதையில் போர் காட்சி படமாக்கபட்ட இடத்தையே பிறகு, சந்தையாக மாற்றியுள்ளனர். போர் காட்சி மட்டும் 200 ஏக்கர் நிலப்பரப்பில் படமாக்கப்பட்டதாம். இந்த மாற்றங்கள் எல்லாமே, மன்னர் காலத்தில் அப்படி இருந்த இடம் இப்போது இப்படி மாறிவிட்டது என படம் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும் என்ற நோக்கோடு படமாக்கியுள்ளனர்.

    இதில் இன்னொரு சுவாராஸ்யமான தகவல் என்னவென்றால் இத்திரைப்படத்தில் செட் போடுவதற்காக மட்டுமே கிட்டதட்ட 8 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். அது பொன்ராம் இயக்கிய முதல் படத்தின் மொத்த பட்ஜெட் செலவு என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Seemaraja movie is releasing in more than hundred theatres in the United states.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X