தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்!
தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன் என இருவரின் படமும் ஒரே தேதியில் ரிலீசாக இருக்கிறது.
Recommended Video

சென்னை: தனுஷின் வடசென்னை படம் வெளியாகும் அதே தேதியில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் சீமராஜா. 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகிபாபு, லால், ராஜேந்திரன், மனோபாலா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

பரிசுகள்
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாள் படப்பிடிப்பை கொண்டாட்டத்துடன் முடித்துள்ளனர். படத்தில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

ரிலீஸ் தேதி:
இதையடுத்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. செப்டம்பர் 13ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை ரிலீஸ்:
அதேநாளில் தான், தனுஷின் வடசென்னை படமும் ரிலீசாகிறது. எனவே, இரண்டில் எது வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுபற்றி நெட்டிசன்கள் இப்போதே விவாதிக்க தொடங்கிவிட்டனர்.

பிரச்சினை:
தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையே ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இருவர் படமும் ஒரே நாளில் ரிலீசாக இருப்பது, அவர்களது உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











