Don't Miss!
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அசால்ட் ஆசாமிக்கு காதல் வந்தா... 'சீமத்துரை'தான்!
புவன் மீடியா வொர்க்ஸ்
பெருமையுடன் வழங்கும்
'சீமத்துரை'.
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் இ சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், 'சீமத்துரை'.
கீதன் - வர்ஷா பொல்லம்மா நாயகன் மற்றும் நாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்' வின்சென்ட், மகேந்திரன், 'சுந்தர பாண்டியன்' காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
"ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவதுதான் சீமத்துரையின் அடையாளம்.
அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக் கொண்டிருப்பவனுக்குள் காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக் கரு.
வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம் தான் 'சீமத்துரை', என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.
ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையில் பாடல்களை அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன் ஆகியோர் எழுதியுள்ளனர். டி திருஞான சம்பந்தம் ஒளிப்பதிவு செய்ய, 'மேயாத மான்' படத்தின் 'தங்கச்சி' பாடலுக்கு நடனம் அமைத்த சந்தோஷ் முருகன் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை, 'பிச்சைக்காரன்' படத்தின் படத்தொகுப்பாளரான டி வீர செந்தில்ராஜூம், கலை இயக்கத்தை 'மரகத நாணயம்' படத்தின் கலை இயக்குநர் என்கே ராகுலும் மேற்கொண்டுள்ளனர்.