Surya 43: இன்று அறிவிக்கப்பட இருந்த சூர்யா 43 பட அறிவிப்பு.. வெளியாகாது என தகவல்
சென்னை: நடிகர் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகவுள்ள படம் சூர்யா 43. கங்குவா படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து இந்தப் படத்தில் சூர்யா இணையவுள்ளார்.
சூர்யா பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இந்நிலையில் இன்றைய தினம் சூர்யா பிறந்தநாளையொட்டி சூர்யா 43 படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.

சூர்யா 43 பட அறிவிப்பு இன்று வெளியாகாது என தகவல்: சூர்யா மற்றும் சுதா கொங்கரா இருவரும் இணைந்து சூரரைப் போற்று என்ற ட்ரெண்ட் செட்டர் படத்தை உருவாக்கியிருந்தனர். அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வெளியானது. ஏழை மக்களுக்கும் விமானப் பயணத்தை சாத்தியமாக்கிய அவரது வாழ்க்கையில் நடந்து சுவாரஸ்யமான நிகழ்வுகளை இந்தப் படத்தில் சிறப்பாக இணைத்திருந்தார் சுதா கொங்கரா.
கெரோனா உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2020ம் ஆண்டில் இந்தப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தமிழ், தெலுங்கில் உருவாகியிருந்த இந்தப்படத்தை தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்திருந்தார். படம் ஒருவேளை திரையரங்குகளில் ரிலீசாகியிருந்தால் வேறு லெவலில் கலெக்ஷனில் பின்னியிருக்கும் என்று திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் பாடல்களும் அனைவரையும் கவரும்வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் சிறந்த நடிகர், இசையமைப்பாளர், நடிகை உள்ளிட்ட 5 தேசிய விருதுகளை இந்தப் படம் அள்ளியது. சுதா கொங்கராவின் நேர்த்தியான திரைக்கதையில் உருவாகியிருந்த இந்தப் படம் பயோபிக்கிற்கு தேவையான அனைத்து சிறப்பான அம்சங்களையும் கொண்டிருந்தது. சூர்யாவும் இந்தப் படத்தில் அந்த கேரக்டராகவே மாறி நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை தற்போது சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அக்ஷய் குமார் லீட் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், தற்போது அடுத்த ஆடு பிப்ரவரி மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. அக்ஷய் குமாரின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யாவை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய தினம் இந்த அறிவிப்பு வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கங்குவா படத்தின் சூட்டிங் இன்னும் நிறைவடையாத நிலையில், சுதா கொங்கராவும் விபத்தில் அடிபட்டுள்ளதால் சூர்யா 43 பட அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











