Aiswarya Rajesh: துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் போர்ஷன்கள் நீக்கம்.. என்ன காரணம்!
சென்னை: நடிகர் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம்.
கௌதம் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போன நிலையில், தற்போது படத்தை ஒட்டுமொத்தமாக நிறைவு செய்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

துருவ நட்சத்திரம் படத்திலிருந்து நீக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள்: கௌதம் மேனன் -விக்ரம் கூட்டணியில் கடந்த 2017ம் ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்டது துருவ நட்சத்திரம். அதே ஆண்டில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் படம் தற்போது மீண்டும் தூசு தட்டப்பட்டு சூட்டிங் நிறைவடைந்துள்ளது. விரைவில் படம் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீசான நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. விரைவில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும் கௌதம் மேனன் மாறியுள்ளார்.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள நிலையில், தற்போது அவரது போர்ஷன்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஒரு மனம் பாடலில் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது இந்தப் பாடலும் படத்தில் இடம்பெறாது என்றும் யூடியூபில் மட்டுமே இருக்கும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான படத்தின் இரண்டாவது பாடலின் யூடியூப் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் நீக்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் போர்ஷன்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் படத்தின் விடுபட்ட சில போர்ஷன்கள் எடுக்கப்பட்ட நிலையில், அவரது காட்சிகள் இல்லாதவகையில் படத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக விக்ரம் -கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் வெளியான மகான் படத்திலும், வாணி போஜன் இடம்பெற்ற காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன. பின்பு யூடியூபில் அவர்கள் இருவரும் சம்பந்த்ப்பட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பெற்றுள்ளார். தொடர்ந்து விக்ரம் படத்தின் ஹீரோயின்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவருவது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











