ஓவியாவின் காதலுக்கு உதவிய சீதா யானை

By Mayura Akilan

நீண்ட நாட்களுக்குப் பிறகு சீனி என்ற தமிழ் திரைப்படத்தில் யானை ஒன்று நடிக்கிறது. கதாநாயகி ஓவியாவுடனான காதலுக்கு, அந்த யானை உதவுகிறதாம். இந்தப்படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் இரண்டு வேடத்தில் நடிக்கிறாராம்.

ஓவியா நாயகியாக நடிக்கும் படம் 'சீனி'. ஹீரோவாக புதுமுகம் சஞ்சீவி நடிக்கிறார். அவருக்கு எம்பிஏ படித்து பெரிய தொழிலதிபராக வேண்டும் என்கிற ஆசை, அதற்கு சீதா என்ற பெண் யானை உதவுகிற மாதிரி கதை.

ஆட்டுக்கார அலமேலு, பஞ்ச கல்யாணி, ராம் லட்சுமணன் இப்படிப்பட்ட படங்களில் விலங்குகள் மனிதர்களின் நண்பர்களாக உதவி செய்யும்.

(சீனி படங்கள்)

இந்த வகை படங்களை ராம நராயணன் அதிகமாக இயக்கினார். சமீபகாலமாக இந்த மாதிரி படங்கள் வருவதில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சீனி என்ற படத்தில் சீதா என்ற யானை நடிக்கிறது.

ஐ லவ் யூடா படத்தை இயக்கிய ராஜதுரை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். நாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். பல நடிகர்களின் மானேஜராகவும், பி.ஆர்.ஓவாகவும் இருந்த மதுரை செல்வம் தயாரிக்கிறார்.

யானைக்காக அனுமதி

யானைக்காக அனுமதி

சீனி படத்தில் 'சீதா' என்ற பெண் யானை நடிப்பதால் புளுகிராஸ் அமைப்பிடம் அனுமதி வாங்கியுள்ளார்களாம்.

அறிமுக நாயகன், ஓவியா நாயகி

அறிமுக நாயகன், ஓவியா நாயகி

எம்.பி.ஏ படித்த நடுத்தரக் குடும்பத்து பையன், வாழ்க்கையில் மிகப்பெரிய தொழிலதிபராக ஆக ஆசைப்படுகிறான். அவனது லட்சியத்திற்கும், காதலுக்கும் சீதா என்னும் யானை உறுதுணையாக இருக்கிறது.

கமெடி படம்

கமெடி படம்

யானையின் உதவியால், நாயகன் தனது லட்சியத்தை எப்படி அடைகிறான்? என்பதையும், தன காதலியை எப்படி கரம்பிடிக்கிறான்? என்பதையும் முழுக்க முழுக்க காமெடிக் களத்தில் சொல்லியிருக்கும் படம் தான் 'சீனி'.

மதுரை யானை

மதுரை யானை

டி.வி.எஸ் நிறுவனத்தின் பராமரிப்பில் மதுரையில் வளர்ந்து வரும் சீதா யானையினை நடிக்க வைக்க புளுகிராஸ் போன்ற அமைப்புகளில் முறையான அனுமதி பெற்று இப்படம் வளர்ந்துள்ளது." என்று இயக்குநர் ராஜதுரை தெரிவித்தார். கால்ஷீட் சொதப்பல் இல்லாத, ரீடேக் வாங்காமல் சிங்கிள் டேக்கில் ஒகே, வாங்கும் நட்சத்திரம் சீதா யானை தான் என்றால் அது மிகையல்ல என்றும் ராஜதுரை கூறினார்.

புதுமுக ஹீரோ

புதுமுக ஹீரோ

கதையே முக்கியத்துவமான சீனி படத்தில், ஓவியா நாயகியாக நடிக்க, சஞ்சீவி எனும் புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். பரத் எனும் காமெடி முகம் காமெடியனாக அறிமுகமாகியுள்ளார்.

பவர்ஸ்டார் இரு வேடத்தில்

பவர்ஸ்டார் இரு வேடத்தில்

சீனி படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், திடீர் நகர் ரவுடி மற்றும் நாயகன் வேலு நாயக்கர் என்று இரு வேடங்களில் நடிக்கிறார்.

ராதாரவி

ராதாரவி

முக்கியமான வேடத்தில் டத்தோ ராதாரவி, செந்தில், பருத்திவீரன் சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

முக்கிய நடிகர்கள்

முக்கிய நடிகர்கள்

அருள்தாஸ், ரவிமரியா, சின்னி ஜெயந்த், சாமிநாதன், டி.பி.கஜேந்திரன், மனோஜ்குமார், பாவா லட்சுமணன், வையாபுரி, ராயல் வெங்கி, கிருஷ்ணன், மகேந்திரன், சந்தோஷ், ஆனந்தன், கோவை கிருஷ்ணன், மீரா கிருஷ்ணன், ரிதிரவி, டான்ஸர் சசிரேகா, கீதா, புவனேஸ்வரி, தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

11 மக்கள் தொடர்பாளர்கள்

11 மக்கள் தொடர்பாளர்கள்

மக்கள் தொடர்பாளராக இருந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள மதுரை செல்வம், தயாரிக்கும் சீனி படத்திற்கு 11 பேர் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்கள்.

வைரமுத்து

வைரமுத்து

இப்படத்தில் மூன்று பாடல்கள், இரண்டு சண்டைக் காட்சிகள், படம் முழுக்க காமெடிக் காட்சிகள், நிரம்பிய சீனி படத்திற்கு சாய் சுரேஷ் படத்தொகுப்பு செய்ய, பாபு கலையமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து, நா.இதையா ஆகியோர் வரிகளுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X