»   »  கசந்த தேன்-சோகத்தில் இயக்குநர்!

கசந்த தேன்-சோகத்தில் இயக்குநர்!

Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் ரகசியத் திருமணம் செய்து கொண்ட கவிஞர் தேன்மொழி, இயக்குநர் சீனு ராமசாமியின் வாழ்க்கை கசக்க ஆரம்பித்து விட்டதாம். விரைவில் தேனை விட்டு ராமசாமி விலகக் கூடும் என்று கூறுகிறார்கள் கோலிவுட்டார்.


பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர் தேன்மொழி. பாடகியும் ஆவார். அவருக்கும், கூடல் நகர் பட இயக்குநர் சீனு ராமசாமிக்கும் இடையே கசமுசா ஆகியது. இதையடுத்து பொத்தினார் போல இருவருக்கும் ஒரு கோவிலில் வைத்து கல்யாணத்தை முடித்து விட்டார்கள்.

இந்தத் திருமணத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே ஆட்கள் வந்திருந்தார்களாம். கட்டாயக் கல்யாணம் என்று கூட ஒரு கிசு கிசு எழுந்தது.

தேன்மொழி தரப்பில், சில சினிமா புள்ளிகள் சேர்ந்து, சீனுவை நிர்ப்பந்தப்படுத்தி கல்யாணம் செய்து விட்டதாகக் கூறப்பட்டது. இருந்தாலும் சர்ச்சையின்றி வாழ்க்கையைத் தொடங்கினார் சீனு.


ஆனால் இப்போது தேன்மொழியை விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளாராம் சீனு. ஆனால் சேர்ந்து வாழவே தேன்மொழி விரும்புகிறாராம்.

இப்போது இருவரும் பிரிந்து விட்டனர். தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்துக்கு சீனு விண்ணப்பிக்கப் போகிறாராம். சீனுவின் இந்த தீர்மானமான போக்கினால் தேன்மொழி அப்செட்டில் உள்ளாராம்.

தேன் அதற்குள் கசந்து விட்டதா சீனு?

Please Wait while comments are loading...