twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்களின் கடும் எதிர்ப்பால் சீனு ராமசாமி ட்வீட் நீக்கம்!

    By Vignesh Selvaraj
    |

    மதுரை : அசோக் குமாரின் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படும் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் உத்தமர் என இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ட்வீட்டை ரசிகர்களின் கடும் எதிர்ப்பால் தற்போது நீக்கி இருக்கிறார்.

    சசிகுமாரின் மைத்துனரும் கம்பெனி ப்ரொடக்‌ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் கந்துவட்டிக்கு பணம் வழங்கிவிட்டு மிரட்டியது தான் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    Seenu ramasamay removes his tweet that in favour of Anbuchezhiyan

    இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் அசோக் குமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'எம்.ஜி.ஆர், சிவாஜி போல் இன்றைய நடிகர்கள் இல்லை. அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. நான் நியாயத்தின் பக்கமே நிற்கிறேன்' என ட்வீட் செய்திருந்தார்.

    சீனு ராமசாமியின் ட்வீட் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் சீனு ராமசாமியின் கருத்துக்கு எதிராக ரிப்ளை செய்து வந்தனர். இந்நிலையில், சீனு ராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பதிந்த ட்வீட்டை நீக்கியிருக்கிறார்.

    English summary
    Sasikumar's brother-in-law Ashok Kumar committed suicide day before yesterday. He wrote a letter and committed suicide because he was threatened by the cinema financier Anbuchezhiyan. In this case, director Seenu Ramasamy tweeted in favour of Anbuchezhiyan, "the mischievousness of the lure of such loyalists like Anbuchezhiyan is painful. I stand on the side of justice". Now, Seenu Ramasamy removes the tweet because many of his fans opposing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X