Seenu Ramasamy: "சீனு ராமசாமிக்கு அடிப்படை மனித குணம் கூட கிடையாது..” மனிஷா யாதவ் பதிலடி!

சென்னை: லியோ படத்தில் நடித்த த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியது விஸ்வரூபம் எடுத்தது.

அப்போது நடிகை மனிஷா யாதவ்க்கு இயக்குநர் சீனுராமசாமி கொடுத்த பாலியல் தொல்லை குறித்தும் செய்திகள் வெளியாகின.

இந்த விவகாரத்தில் இயக்குநர் சீனு ராமசாமி தனது விளக்கத்தை கொடுத்திருந்தார்.

இந்நிலையில், தனது சமீபத்திய பேட்டியில் சீனுராமசாமியின் சுயரூபத்தை மனீஷா யாதவ் அம்பலப்படுத்தியுள்ளார்.

 Seenu Ramasamy: Actress Manisha Yadav exposes Seenu Ramasamys torture

சீனுராமசாமிக்கு மனிஷா யாதவ் பதிலடி: பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டதாக தெரிகிறது.

முன்னதாக இவர் சீனுராமசாமியின் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இதில் கமிட்டாகியிருந்த மனிஷா யாதவ், சீனு ராமசாமி மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்த விவகாரம் த்ரிஷா - மன்சூர் அலிகான் சர்ச்சையின் போது வெளியே வந்தது.

இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி தான் முதலில் பேசியிருந்தார். இதனையடுத்து இந்தச் சம்பவம் குறித்து சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்து வந்தார். இந்நிலையில் சீனுராமசாமி, மனிஷா யாதவ் இருவருமே பிரபல பத்திரிகைக்கு தனித்தனியாக பேட்டிக் கொடுத்துள்ளனர். அதில், சீனு ராமசாமியின் சுயரூபத்தை அம்பலப்படுத்தியுள்ளார் மனிஷா யாதவ். இதனை ப்ளூ சட்டை மாறனும் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

அதில், "சீனு சொன்னது: இடம் பொருள் ஏவல் ஷூட்டிங் சமயத்தில் நானும் மனீஷாவும் வெவ்வேறு ஹோட்டல்களில் தான் தங்கி இருந்தோம். அப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். கிராமத்து நாயகியாக இவர் சரியாக நடிக்க மாட்டார் என்பதால் விஜய சேதுபதிக்கு பதில் விஷ்ணு விஷாலின் ஜோடியாக நடிக்க சொன்னேன். இல்லை, எனக்கு இந்த கேரக்டர்தான் வேண்டுமென சொன்னார். ஆகவே அவரை படத்தில் இருந்து நீக்கினேன். அந்த கோபத்தில் என் மீது பழி போட்டிருக்கலாம்."

"கேள்வி: பிறகு ஏன் சில தினங்களுக்கு முன்பு மனீஷாவிற்கு போன் செய்தீர்கள்?
எனது புதிய படத்தில் ஒரு வழக்கறிஞர் கேரக்டர் உள்ளது. அதில் நடிக்க விரும்புகிறீர்களா என கேட்கவே போன் செய்தேன்." என சீனு ராமசாமி கூறியுள்ளார். இதனை மறுத்துள்ள மனிஷா யாதவ், அப்போது நடந்தது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

அதன்படி, மனிஷாவின் பதிலடி: "சில தினங்களுக்கு முன்பு சீனுராமசாமி ஆபீஸில் இருந்து எனக்கு போன் வந்தது. அவருடைய புதுப் படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டார்கள். பல வருடங்கள் என்னிடம் பேசாதவர்... இப்போது பேச வேண்டிய அவசியமென்ன என சந்தேகப்பட்டேன். இடம் பொருள் ஏவல் படத்தில் அவர் நடந்துகொண்ட விதம் மோசமாக இருந்தது. பலமுறை என்னிடம் நெருங்க நினைத்தும், அவர் விருப்பத்திற்கு இணங்காமல் நான் இருந்தேன். ஆகவே என்னை படத்தில் இருந்து நீக்கினார்."

"எனக்கு நடிக்கத்தெரியாது என திரைத்துறையினர் பலரிடமும் பொய்த் தகவல் பரப்பினார். ஆகவே சில தினங்களுக்கு முன்பு அவரது புதுப்பட வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். இதுபற்றி என் அம்மாவிடம் கூறினேன். மேடை நாகரீகத்திற்காக மட்டுமே 'ஒரு குப்பைக்கதை' பட நிகழ்ச்சியில் நன்றி சொன்னேன். ஆனால் தற்போது அதை வேறுவிதமாக மாற்றி சொல்லியிருக்கிறார். இவ்வளவு மோசமாக நடந்துகொள்ளும் ஒருவர் என்ன தைரியத்துடன் இப்படி பொய் பேசுகிறார்? எனக்கு புதுப்படத்தில் வாய்ப்பு தருவதன் மூலம் இவர் செய்த தவறுகள் மூடி மறைக்கப்படும் என நினைக்கிறாரா?"

"அடிப்படை மனித குணம் கூட இல்லாத இப்படியான மனிதர்கள் மீது எனக்கு எந்த மதிப்புமே இல்லை. எனக்கு நல்ல கணவர், நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகள் உள்ளது. என்னைப் போல எந்த ஒரு புது நாயகியும் இப்படியான மோசமான அனுபவங்களை சந்திக்கவே கூடாது" என மிக காட்டமாக பதில் கூறியுள்ளார். அவரின் இந்தப் பேட்டி தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X