உண்மையில் வைரமுத்துவை வளர்த்தது இளையராஜா தான்.. சீனு ராமசாமி என்ன சொல்றாரு பாருங்க!
சென்னை: வைரமுத்துவை அதிகளவில் நேசித்து வரும் இயக்குநர் சீனு ராமசாமி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், "உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான்" என ட்வீட் ஒன்றை பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் படிக்காத பக்கங்கள் படத்திற்கு 'சரக்கு' பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா? என்கிற பிரச்சனை தற்போது சினிமாவில் எழுந்துள்ளது. இசையும் பாடல் வரிகளும் இணைந்திருந்தால் நல்ல பாடல் உருவாகும் என்றும் ஒருவரை பெயரை வைத்து தான் பிரேமா என்றோ சங்கர் என்றோ அழைக்கிறோம். பெயரே இல்லை என்றால் எப்படி அழைப்போம். வெறும் இசை மட்டுமே இருந்திருந்தால் அந்த பாடலை அடையாளம் காண முடியுமோ? என்றார்.

காலம் கடந்தும் பாடல்கள் நிற்பதற்கு காரணம் இசை மட்டும் தானா? கண்ணதாசனின் வரிகளில் உருவான பாடல்களை எந்தவொரு இசையும் இல்லாமல் பாட முடியாதா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மருதகாசி, உடுமலைப்பேட்டை நாராயண கவி, ஆலங்குடி சோமு உள்ளிட்ட பல கவிஞர்கள் தமிழ் சினிமாவுக்கு கருத்துள்ள பாடல் வரிகளை கொடுத்து காலம் கடந்தும் நிற்கின்றனர் எனக் கூறினார். இசையும் கவிதையும் சேர்ந்தால் தான் பாடல். அது இல்லை என்று சொல்பவர் அஞ்ஞானி என இளையராஜாவை தாக்குவது போல பேசியது பரபரப்பை கிளப்பியது. அந்த படத்தின் நிகழ்ச்சியும் அந்த படத்தின் புரமோஷனுக்காக சர்ச்சை கிளப்ப வேண்டும் என திட்டமிட்டே வைரமுத்து அப்படி பேசியதாக கூறுகின்றனர்.
கொந்தளித்த கங்கை அமரன்: இயக்குநர் வெங்கட் பிரபுவின் அப்பாவும் இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன் தனது அண்ணனை மறைமுகமாக சாடியிருக்கிறார் வைரமுத்து என்று தெரிந்ததும் வைரமுத்து ஒரு நல்ல மனுஷனே கிடையாது என்றும் நன்றியுணர்வு இல்லாதவர் என்றும் எங்களால் லிப்ட் ஏறி மேலே வந்தவர் என்றும் இன்னொரு வார்த்தை இளையராஜா பற்றி பேசினால் நடப்பதே வேறு என கொந்தளித்தார்.
சீனு ராமசாமி சீண்டல்: உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான் வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில் யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல ட்யூன்களுக்கு நிறைய Dummy lyrics ஓகே பண்ணி அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர் இளையராஜா அவர்கள் என கங்கை அமரனை டேக் செய்து மீண்டும் சீண்டியிருக்கிறார் சீனு ராமசாமி.

இளையராஜா ரசிகர்கள் எதிர்ப்பு: சீனு ராமசாமியின் இந்த வஞ்ச புகழ்ச்சி அணி ட்வீட்டை பார்த்த இளையராஜா ரசிகர்கள் அவருக்கு எதிராக கடும் கண்டனங்களை கமெண்ட் மூலமாக போட்டு வருகின்றனர். வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் இளையராஜாவுக்கு எதிராகவும் பேசுவது சரியல்ல என திட்டி வருகின்றனர்.
மொரிஷியஸில் இளையராஜா: இங்கே இளையராஜாவை சுற்றி ஏகப்பட்ட சண்டைகள் மற்றும் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மொரிஷியஸில் தனது மகன் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து கொண்டு இளையராஜா கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார். ரஜினிகாந்தின் கூலி படத்துக்கு காப்புரிமை கேட்டு இளையராஜா அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக பல பிரபலங்கள் பல விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











