கால்ஷீட்டுக்காக சிவகார்த்திகேயனை தோனியுடன் கம்பேர் பண்ணல.. கடுப்பான பிரபல இயக்குநர்!

சென்னை: கால்ஷீட்டுக்காக சிவகார்த்திகேயனை தோனியுடன் கம்பேர் பண்ணவில்லை என பிரபல இயக்குநர் ட்வீட் போட்டுள்ளார்.

Recommended Video

V-CONNECT | ACTOR PRASANNA CHAT PART-03 | சிவகார்த்திகேயன் கூட COMPARE பன்னாதீங்க | FILMIBEAT TAMIL

"பொதுவா தோனி போல நானும் காமுமா" என சிவகார்த்திகேயன் சமீபத்தில் டாக்டர் படத்துக்கு பாடல் எழுதி இருந்த நிலையில், நீங்களும் தோனி போல தான் என இயக்குநர் சீனு ராமசாமி சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி நேற்று மாலை 7:29 மணிக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தோனிக்கு பிரியா விடை கொடுத்து வருகின்றனர்.

அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்

அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்

நடிகர் சிவகார்த்திகேயனும் தனது ட்விட்டர் பக்கத்தில், மிகப்பெரிய நன்றி தோனி.. என்னை போன்ற பலருக்கும் ஊக்கமளிக்கும் நபராக இருந்து வருகிறீர். நீங்க ஒரு சிறந்த தலைவர்.. உங்களின் அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டை பார்க்க ஆவலுடன் காத்து இருக்கிறோம் என மிகவும் உருக்கமாக பதிவிட்டு உள்ளார்.

நீங்களும் தோனி போல தான்

நீங்களும் தோனி போல தான்

நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற சிறந்த படங்களை இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி, சிவகார்த்திகேயனின் ட்வீட்டுக்கு கீழே, நீங்களும் தோனி போல தான். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கடின முயற்சியால் முன்னேறி பலருக்கும் இன்ஸ்பயர் ஆக இருக்கிறீங்க.. மேலும், தயாரிப்பு நிறுவனம் எல்லாம் தொடங்கி, பல இளைஞர்களுக்கு தோனி போலவே உதவுறீங்க என பாராட்டி உள்ளார்.

கால்ஷீட் வேணுமா

கால்ஷீட் வேணுமா

சிவகார்த்திகேயனை சீனு ராமசாமி இப்படி புகழ்ந்த நிலையில், நெட்டிசன் ஒருவர், யாரையும் யாருடனும் ஒப்பிடாதீங்க.. உங்களை போன்றவர்களால் தான் ரசிகர்கள் சண்டை உருவாகிறது. உங்களுக்கு கால்ஷீட் வேண்டும் என்றால், நேரடியாக சிவகார்த்திகேயனிடம் கேட்டு படம் பண்ணுங்க என கமெண்ட் செய்து, அவரை நோகடித்துள்ளார்.

கடுப்பான இயக்குநர்

கடுப்பான இயக்குநர்

தம்பி இது கால்ஷீட் இல்லை.. சிவகார்த்திகேயனுக்கு நான் தரும் மார்க்‌ஷீட் என தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. எந்தவொரு பெரிய பின்புலமோ இல்லாமல், வாழ்வில் உழைத்து முன்னேறும் அனைவரும் தோனி மாதிரி தான் என அந்த நெட்டிசனுக்கு விளங்கும்படி பதில் அளித்துள்ளார்.

ரொம்ப நன்றி சார்

ரொம்ப நன்றி சார்

உங்களின் கனிவான வார்த்தைகளுக்கும் பாராட்டுக்களுக்கும் ரொம்ப நன்றி சார்.. இது தான் எனக்கு உந்து சக்தியாக இருக்கு.. இன்னும் நல்ல மனுஷனாகவும், நல்ல நடிகனாகவும் மாற முயற்சிக்கிறேன்.. கடினமாக உழைக்க உங்களை போன்றவர்களின் ஊக்கம் தான் கை கொடுக்கிறது ரொம்ப ரொம்ப நன்றி சார் என சிலிர்த்து போயுள்ளார் சிவகார்த்திகேயன்.

20 மில்லியன் வியூஸ்

20 மில்லியன் வியூஸ்

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ரிலீசான டாக்டர் படத்தின் "செல்லம்மா" பாடல் இதுவரை 20 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் உருவான அந்த பாடலில், "பொதுவா தோனி போல நானும் காமுமா.. இன்னைக்கு எக்ஸைட்மென்ட் ஆனேன் மா" என்ற தோனி குறித்த வரிகளும் இடம்பெற்று இருக்கும்.

தோனி போல

தோனி போல

அதே போல சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடித்த கனா படத்தில், கிரிக்கெட் வீரராக சிவகார்த்திகேயன் நடித்து இருந்த நிலையில், தோனியை போல விக்கெட் கீப்பராக நடித்து இருப்பார். தோனியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் என்பதை பல படங்களில் வெளிப்படுத்தி இருப்பார் சிவகார்த்திகேயன்.

தேசிய விருது பெற்ற இயக்குநர்

தேசிய விருது பெற்ற இயக்குநர்

கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குநரான சீனு ராமசாமி, விஜய்சேதுபதியை வைத்து 2010ல் தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கி தேசிய விருது பெற்றார். தொடர்ந்து, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே படங்களை இயக்கிய அவர், மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் படத்தை இயக்கி வருகிறார். இடம் பொருள் ஏவல் படமும் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X