மனிஷா யாதவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தேனா? - இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம்

By Shankar

சென்னை: நடிகை மனிஷா யாதவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வந்த செய்திகள் பொய்யானவை. அவரை படத்திலிருந்தும் நீக்கவில்லை, வேறு கேரக்டரில் நடிக்குமாறு கூறியுள்ளேன், என்றார் இயக்குநர் சீனு ராமசாமி.

இடம் பொருள் ஏவல்

இடம் பொருள் ஏவல்

விஜய் சேதுபதியை வைத்து ‘‘இடம் பொருள் ஏவல்'' படத்தை சீனு ராமசாமி இயக்கி வருகிறார். இதில் மனிஷா யாதவ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டார்.

மனிஷா புகார்

மனிஷா புகார்

இதனால் மனிஷா யாதவ் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் மீடியாவில் கூறி வருகிறார் மனிஷா.

சீனு ராமசாமி விளக்கம்

சீனு ராமசாமி விளக்கம்

இதுகுறித்து சீனுராமசாமியிடம் கேட்டபோது, "இடம் பொருள் ஏவல் படம் மலை கிராமத்து கதை. மனிஷா யாதவுக்கு மேக்கப் போட்டபின் முகத்தில் மலை கிராமத்து பெண் சாயல் வரவில்லை. கடும் முயற்சி செய்தும் தோற்றத்தை மாற்ற முடியவில்லை. நகரத்துப் பெண் போலவே தெரிகிறார். எனவேதான் அவரை அந்த வேடத்திலிருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எந்தத் தொல்லையும் தரல

எந்தத் தொல்லையும் தரல

விஷ்ணு ஜோடியாக இன்னொரு கேரக்டரில் நடிக்கும்படி கேட்டுள்ளோம். இன்னும் அவர் பதில் சொல்லவில்லை.

மற்றபடி அவருக்கு எந்தத் தொல்லையும் நான் தரவில்லை. எதற்காக அப்படி அந்தப் பெண் பொய் சொல்ல வேண்டும் என்றும் புரியவில்லை," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X