கூலிங் க்ளாஸ் போட்டு 'தலைவரோடு ஒரு படம்'... ஆசை நிறைவேறிடுச்சி! - சீனு ராமசாமி
இன்றைக்கு படம் பண்ணிக் கொண்டிருக்கும் எல்லா இயக்குநர்களுக்குமே ஒரு ஆசை... அது சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும். அது முடியலேன்னா... அட்லீஸ்ட் அவரைச் சந்தித்து ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

இயக்குநர் சீனு ராமசாமிக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா என்ன?
அந்த ஆசை இன்று நிறைவேறிவிட்டது. தர்மதுரை படத்தின் நூறாவது நாள் விழா ஷீல்டை ரஜினியிடம் கொடுக்க அவரது வீட்டுக்குச் சென்றனர் சீனு ராமசாமி மற்றும் குழுவினர். அனைவரையும் அன்புடன் வரவேற்று, ஷீல்டைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தியும் அனுப்பியுள்ளார் ரஜினி.
சீனு ராமசாமியிடம் நீண்ட நேரம் அவரது படங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியை சீனு ராமசாமி இப்படிப் பகிர்ந்துள்ளார்:
Comments


Click it and Unblock the Notifications