twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓடிடி தளம்.. தணிக்கைச் செய்யப்படாத வார்த்தைகளால் அந்த அபாயம்.. இயக்குனர் சீனு ராமசாமி திடுக்!

    By
    |

    சென்னை: ஓடிடி தளங்களில் வெளிவரும் பட காட்சிகளில் தணிக்கை செய்யப்படாத வார்த்தைகளால் அச்சம் இருக்கிறது என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.

    சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி.

    பிறகு விஷ்ணு நடித்த நீர்பறவை, விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை, உதயநிதி, தமன்னா நடித்த கண்ணே கலைமானே உட்பட சில படங்களை இயக்கினார்.

     அய்யோ.. சிரிக்காத ஆத்தா பயமா இருக்கு.. லாஸ்லியாவின் புதிய போட்டோவை பார்த்து பங்கம் செய்த வலைவாசிகள்! அய்யோ.. சிரிக்காத ஆத்தா பயமா இருக்கு.. லாஸ்லியாவின் புதிய போட்டோவை பார்த்து பங்கம் செய்த வலைவாசிகள்!

    பொன்மகள் வந்தாள்

    பொன்மகள் வந்தாள்

    அடுத்து அவர் இயக்கிய மாமனிதன் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, கொரோனா காரணமாக, தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்பட சில படங்கள் வெளியாகி உள்ளன.

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று

    அடுத்து சூர்யாவின் சூரரைப் போற்று, ஐஸ்வர்யா ராஜேஷின் க/பெ ரணசிங்கம் உள்பட சில படங்கள் ஓடிடியில் வெளிவர இருக்கிறது. இதற்கிடையே, ஓடிடியில் படங்களை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓடிடி-க்கு ஆதரவாகவும் எதிராகவும் திரையுலகில் பேசி வருகின்றனர்.

    சீனு ராமசாமி

    சீனு ராமசாமி

    இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இதுபற்றி அளித்த பேட்டி: ஒவ்வொரு கட்டங்களிலும் சினிமா வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இந்த பரிணாம வளர்ச்சியில், முக்கியமான படப்பிடிப்புகருவிகள், லென்ஸ்கள்ல வளர்ச்சி. பிலிம் சுருள்கள்ல இருந்து அடுத்தகட்டமா டிஜிட்டலுக்கு வந்தாச்சு. கதைகள்ல கூட, நிறைய முன்னேற்றங்களை பார்த்தாச்சு.

    மாறாமல் இருப்பது

    மாறாமல் இருப்பது

    கதை சொல்லும் வகைகள் உண்டாகி நிறைய மாற்றங்களை சந்திச்சுட்டு இருக்கோம். இத்தனை மாற்றங்கள் வந்தாலும் ஆரம்ப நாட்கள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் மாறாம இருக்கிறது வெள்ளித்திரைக்கும் ரசிகனுக்குமான அனுபவம் மட்டும்தான். இதுதான் உண்மை. இதுக்கு காரணமா நான் நினைக்கிறது, பொதுவா மனித குலத்தின் உள் உணர்வுல ஒரு விஷயம் இருக்கு.

    மனித குல ரசனை

    மனித குல ரசனை

    அது, கொண்டாட்டம்னாலும் துக்கம்னாலும் ஒன்றாகக் கூடுவது என்ற பிறவிக்குணம். எல்லாரும் கூடி ஒரு நிகழ்வை ரசிப்பது மனித குலத்தின் ரசனையா இருக்கு. அதனால திரையரங்குகள் எப்போதும் வாழும். சினிமா இருக்கிறவரை அது இருக்கும். அதை யாராலயும் அழிக்க முடியாது.

    அங்கீகாரம் கிடைக்கும்

    அங்கீகாரம் கிடைக்கும்

    தொலைக்காட்சி வரும்போதும் சினிமா அழிஞ்சு போகும்னு சொன்னாங்க, அதையும் தாண்டி வாழ்ந்துட்டுதான் இருக்கு. அதனால, இப்ப உண்டாகி இருக்கிற மாற்றங்கள்ல, தியேட்டரை சேர முடியாமல் தவிக்கிற படங்கள் ஒடிடி தளம் மூலம் மீளும். அங்கீகாரம் கிடைக்கும். உலகம் முழுவதும் மக்கள் அந்தப் படங்களை பார்ப்பாங்க. இது ஒரு வகையில் நன்மைதான்.

    அச்சமா இருக்கு

    அச்சமா இருக்கு

    கதை சொல்லும் முறையில் மாற்றங்களும் பரீட்சார்த்த முறைகள்லயும் மாற்றங்களைப் பார்க்கலாம். அதோட மக்களை கவர்ந்திழுக்க என்ன வேணாலும் செய்யலாம் என்கிற அபாயமும் இருக்கு. சில தணிக்கை செய்யப்படாத வார்த்தைகளை பார்க்கும்போது நமக்கே அச்சமா இருக்கு. அது இல்லாம இல்லை.

    தாங்கிப் பிடிக்கும்

    தாங்கிப் பிடிக்கும்

    மற்றபடி எல்லா விஞ்ஞானமும் நல்லாதாரத்தையும் சேதாரத்தையும் கொண்டே வரும். அதனால மனித குலம், அதை எப்படி பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்துதான் அதன் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும். அதனால் திரையரங்குகளும் வாழும், சிறிய படங்கள் மற்றும் புதிய முயற்சிகளை ஒடிடி தளங்கள் தாங்கிப் பிடிக்கும். இவ்வாறு சீனு ராமசாமி சொன்னார்.

    English summary
    Director seenu Ramasamy, fears about the uncensored words in Digital films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X