டைட்டில் கிடைச்சாச்சு.. விரைவில் ஃபர்ஸ்ட் லுக்.. விஜய் சேதுபதி படம் குறித்து வெளியான அப்டேட்!

சென்னை: விஜய் சேதுபதி படம் குறித்த அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தென்மேற்கு பருவ காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக

தற்போது விஜய் சேதுபதிவை வைத்து மாமனிதன் மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கியுள்ள சீனு ராமசாமி தற்போது மூன்றாவது முறையாக மாமனிதன் படத்திற்கு இணைந்துள்ளார்.

யுவன் தயாரிப்பு

யுவன் தயாரிப்பு

இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்.

முக்கிய தகவல்

முக்கிய தகவல்

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாமனிதன் படம் குறித்த முக்கிய தகவலை நடிகர் சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விரைவில் ஃபர்ஸ்ட் லுக்

விரைவில் ஃபர்ஸ்ட் லுக்

அதாவது, மாமனிதன் தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை முறைப்படி யுவன் சங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில் வெளியாகும்" என அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X