வீரம் அஜித் ஸ்டைலில் ரிலீஸுக்கு முன்பு மொட்டை போட்ட உதயநிதி பட இயக்குனர்
Recommended Video

சென்னை: கண்ணே கலைமானே படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமியும், ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனும் முடி காணிக்கை செய்துள்ளனர்.
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வித்தியாசமாக நடித்துள்ள படம் கண்ணே கலைமானே. கமல் ஹாஸனின் கண்ணே கலைமானே பாடலின் முதல் வரி தான்.
படத் தலைப்பு மட்டும் அல்ல போஸ்டர்களும் வித்தியாசமாக உள்ளன.

தமன்னா
கண்ணே கலைமானே படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். உதயநிதி போன்ற எளிமையான ஆளை பார்க்க முடியாது என்று தமன்னா புகழ்ந்து பேசியுள்ளார்.
சீனு ராமசாமி
சீனு ராமசாமியும், படத்தின் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதை சீனு ராமசாமி புகைப்படத்துடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வீரம்
வீரம் படம் ரிலீஸாகும் முன்பு இயக்குனர் சிவாவும், அஜித்தும் முடி காணிக்கை செய்தனர். இந்நிலையில் சீனு ராமசாமியும் முடி காணிக்கை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவல்
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள கண்ணே கலைமானே பட போஸ்டர்களை பார்த்தாலே படம் வித்தியாசமானதாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகின்றது.


Click it and Unblock the Notifications











