Seenu Ramasamy - நார்வேயிலும் குடித்துவிட்டு சில்மிஷம் செய்தார் சீனு ராமசாமி.. பிஸ்மி ஓபன் டாக்

சென்னை: Seenu Ramasamy (சீனு ராமசாமி) இயக்குநர் சீனு ராமசாமி நார்வேயிலும் குடித்துவிட்டு பெண்களிடம் அத்துமீறினார் என்று பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியது கடந்த வாரம் முழுக்க தமிழ் திரையுலகில் பெரும் புயலை கிளப்பியது. விவகாரம் எல்லை மீறியதை அடுத்து மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டார். த்ரிஷாவும் மன்னித்துவிட்டார். இதனால் அந்த விஷயம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

seenu ramasamy manisha yadav controversy bismi Release New Video About This Issue

புதிய புயல்: அந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோதே பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ''இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்தபோது நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தார். அதனை மனிஷாவே எனக்கு ஃபோன் செய்து சொன்னார். அவரின் வாக்குமூலமும், ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. சீனுவால்தான் அவர் அந்தப் படத்திலிருந்து ஒரு வாரத்திலேயே வெளியேறிவிட்டார்" என்றார். அவரது இந்த பேட்டி கோலிவுட்டில் புதிய புயலை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனு ராமசாமி விளக்கம்: சீனு ராமசாமியின் படைப்புகள் அனைத்துக்குமே பெரும் மரியாதை இருக்கும் சூழலில் அவரா இப்படி என்று பிஸ்மியின் பேட்டியை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். சூழல் இப்படி இருக்க, ஒரு குப்பை கதை படத்தின் விழா ஒன்றில் தனக்கு மனிஷா யாதவ் நன்றி சொல்லும் வீடியோவை பகிர்ந்து இவங்கதான் என்னால சினிமாவை விட்டு போய்ட்டாங்களா என கேள்வி எழுப்பியிருந்தார்.

மனிஷா பதிலடி: இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து நடிகை மனிஷா யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஒரு குப்பை கதை மேடையில் எல்லோருக்கும் நன்றி சொல்வது போல்தான் அவருக்கும் (சீனு ராமசாமி) நன்றி சொன்னேன். 9 வருடங்களுக்கு முன்னர் நான் சொன்ன வார்த்தைகள் மட்டுமே உண்மை" என ஓபனாக சொல்லியிருந்தார். இதனால் பலரும் சீனு ராமசாமிக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர்.

பிஸ்மி பேச்சு: இதற்கிடையே சீனு ராமசாமி பற்றி பிஸ்மி அளித்த பேட்டியை சம்பந்தப்பட்ட யூட்யூப் சேனல் நீக்கிவிட்டது. இந்நிலையில், பிஸ்மி வெளியிட்டிருக்கும் வீடியோவில், "இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தபோது மனிஷா யாதவ்விடம் சீனு ராமசாமி மோசமாக நடந்துகொண்டார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.

திரையுலகை சேர்ந்த நண்பர் ஒருவர் எனக்கு ஃபோன் செய்து, சீனு ராமசாமி மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லையை அதிகம் கொடுக்கிறார் என்று சொன்னார். சீனு ராமசாமியின் ஆசைக்கு உடன்பட மறுத்ததால் மனிஷாவை படத்திலிருந்து நீக்கிவிட்டார். மனிஷா யாதவ் மட்டுமின்றி வேறு சில பெண்களும் அவரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீர்ப்பறவை படத்துக்கு முதலில் பிந்து மாதவிதான் கமிட் செய்யப்பட்டார். அவரிடமும் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தார். அதனால் பிந்துவும் படத்திலிருந்து வெளியேறினார்.

நார்வேயிலும்: இதுமட்டுமில்லை சீனு ராமசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது ஒருமுறை நார்வேயில் வழங்கப்பட்டது. அங்கு சென்ற அவர் நன்றாக குடித்துவிட்டு அங்குள்ள பெண்களிடமும் அத்துமீறி நடந்தார். இது அங்கு இருக்கும் தமிழர்களுக்கும் தெரியும். அநாகரிமாக நடந்துகொண்ட சீனு ராமசாமியை அங்குள்ள தமிழர்கள் அருவருப்பாகத்தான் பார்த்தார்கள்"" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X