twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "எனக்கு சாதி மத சிந்தனையே கிடையாது" - சசிகுமாருக்கு ஆறுதல் தெரிவித்து சீனு ராமசாமி விளக்கம்

    By Vignesh Selvaraj
    |

    மதுரை : சசிகுமாரின் மைத்துனரும் கம்பெனி ப்ரொடக்‌ஷன்ஸ் நிர்வாகியுமான அசோக் குமார் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் கந்துவட்டிக்கு பணம் வழங்கிவிட்டு மிரட்டியது தான் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் அசோக் குமாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று சீனு ராமசாமி அசோக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஃபேஸ்புக் பதிவொன்றை எழுதியிருக்கிறார். அதில் நண்பனை இழந்து வாடும் சசிகுமாருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார் சீனு ராமசாமி.

    உத்தமர் அன்புச்செழியன்

    உத்தமர் அன்புச்செழியன்

    சீனு ராமசாமி நேற்று, 'எம்.ஜி.ஆர், சிவாஜி போல் இன்றைய நடிகர்கள் இல்லை. அன்புச்செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. நான் நியாயத்தின் பக்கமே நிற்கிறேன்' என அன்புச்செழியனுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார்.

    சர்ச்சைக்குரிய ட்வீட் நீக்கம்

    சர்ச்சைக்குரிய ட்வீட் நீக்கம்

    சீனு ராமசாமியின் ட்வீட் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் சீனு ராமசாமியின் கருத்துக்கு எதிராக ரிப்ளை செய்து வந்தனர். சீனு ராமசாமி சாதிப் பாசத்தில் முட்டுக்கொடுப்பதாகவும் பலர் கொந்தளித்தனர். இதையடுத்து, சீனு ராமசாமி அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பதிந்த ட்வீட்டை நீக்கினார்.

    இரங்கல் பதிவு

    இரங்கல் பதிவு

    மறைந்த அசோக் குமாரின் உடல் தகனம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், சீனு ராமசாமி, அசோக் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஃபேஸ்புக் பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார். அந்தப் பதிவில் நண்பனை இழந்து வாடும் சசிகுமாருக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் சீனு ராமசாமி. தன்னை விமர்சித்தவர்களுக்கு இப்பதிவின் மூலம் விளக்கம் சொல்லி இருக்கிறார் சீனு ராமசாமி.

    ஜீரணிக்க முடியாத வேதனை

    ஜீரணிக்க முடியாத வேதனை

    சீனு ராமசாமியின் பதிவில், "திரு.சசிகுமாரும் நானும் இணைந்து ஒரு படம் வேலை செய்ய வேண்டும் என்று மிகுந்த அன்புடனும்,மரியாதையுடனும் தனது வாழ்த்துக்களையும் சொல்லி அனுப்பி வைத்த அசோக்குமார் தற்கொலை ஜீரணிக்க முடியாத வேதனை.

    சதீஷ் இறப்பு

    சதீஷ் இறப்பு

    ஏனென்றால் நான் தர்மதுரை படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் மனைவியை விட்டு பிரிந்து இருந்த என் தம்பி சதீஷ் இதே போல் தூக்கிட்டு இறந்தான். அவன் நினைவு வராத நாளே எனக்கு இல்லை.

    சாதி மத சிந்தனை இல்லை

    சாதி மத சிந்தனை இல்லை

    நான் தயாரிப்பாளர் இல்லை. அதேபோல் வட்டிக்கு வாங்கி படம் எடுக்கும் தைரியமும் எனக்கு இல்லை. மற்றபடி நான் இடதுசாரி கொள்கைகளில் தீவிர பற்று உடையவன். எனக்கு சாதி,மதம்... அந்த எண்ணமே இல்லை.

    சசிகுமார் மீள வேண்டும்


    தயாரிப்பாளர் திரு.அசோக்குமார் அவர்களின் கரங்களால் தொடங்கப் பெற்று இருக்க வேண்டிய இந்த படம் தொடங்கப்படாமல் போய் விட்டது வேதனை அளிக்கிறது.

    எப்படி பார்த்தாலும் உயிர் பிரிவு, உறவு பிரிவு, மறக்க முடியாத நினைவுகள் இவற்றில் இருந்து சசிக்குமார் மீண்டு வந்து வெற்றிகரமாக வலம் வர வேண்டும் என்பதே இந்த நாளில் நான் முன் வைக்கும் பிரார்த்தனை." என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Sasikumar's brother-in-law Ashok Kumar committed suicide. He wrote a letter and committed suicide because he was threatened by the cinema financier Anbuchezhiyan. In this case, Director Seenu ramasamy tweeted by support Anbuchezhiyan. Now, He explains his position on his facebook page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X