பூ மிதந்து போவது போல..'கேடி'யை பாராட்டிய சீனு ராமசாமி.. ஓடோடி வந்து நன்றி சொன்ன பெண் இயக்குனர்!
சென்னை: இயக்குனர் மதுமிதா இயக்கி கேடி படத்தை இயக்குனர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.
தமிழில் வல்லமை தாராயோ, கொல கொலயா முந்திரிக்கா, முனே மூனு வார்த்தை ஆகிய படங்களை இயக்கியவர் மதுமிதா.

இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம், கே.டி (எ) கருப்பு துரை. மு.ராமசாமி, நாகவிஷால், யோக் ஜேப்பி உட்பட பலர் நடித்திருந்தனர்.
கேடி
கருப்புதுரை
ஏராளமான புதுமுகங்கள் நடித்திருந்த இந்தப் படம் கவனிக்கப்பட்டது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதையும் திரைக்கதையும் பேசப்பட்டன. ஐந்து பிள்ளைகளை பெற்ற வயதான கருப்புதுரைக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. குடும்பம் ஒன்று கூடி, தலைக்கூத்தல் முறையில் கருணை கொலை செய்ய முடிவு செய்கிறது.
கோவில்
ஆதரவற்ற சிறுவன்
இதையறிந்து அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறார் கருப்புத்துரை, வெளியூரில் கோவில் ஒன்றில் தஞ்சமடைகிறார். அங்கு வளரும் ஆதரவற்ற சிறுவன் குட்டியின் நட்பு கிடைக்கிறது, கருப்புத்துரைக்கு. இருவருக்குமான நட்பு கடைசியில் என்னவாகிறது என்பதுதான் எந்த மிகைப்படுத்தலும் இல்லாத சுவாரஸ்யமான கதை.
பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற இந்தப் படத்தை சமீபத்தில் நெட்பிளிக்ஸில் பார்த்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. இதையடுத்து படத்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில் 'ஒரு ஓடையில் பூ மிதந்து போவது போல் எளிமையான படம். ஒளிப்பதிவு கவிதை, பெரியவர் மு.ராமசாமி, சிறுவன் நாகவிஷால், கிருஷ்ணா, படவா கோபி, உரையாடல்கள், சிறப்பு. வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து படத்தை வாழ்த்தியதற்கு கே.டி படத்தின் இயக்குனர் மதுமிதா, நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி, உதயநிதி, தமன்னா நடித்த கண்ணே கலைமானே படத்துக்குப் பிறகு மாமனிதன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ளனர். சமீபத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக பாடல் ஒன்றை எழுதி இருந்தார்.


Click it and Unblock the Notifications











