அமைச்சர் கீர்த்தனா செயல்பாட்டில் லஞ்சம், ஊழல் துளியும் இல்லை.. சீனு ராமசாமி சொன்ன பதில்!

சென்னை: தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளிக்குச் சென்று மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் உரையாட சொன்ன வீடியோ மீடியாக்களின் வழியாக வெளியே வந்து பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அந்த மாணவியை அமைச்சர் இழிவுப்படுத்தி விட்டார் என்றும் மாணவியின் தன்னம்பிக்கையை உடைத்து விட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம் எதிர்ப்புக் குரல் தெரிவித்து வருகின்றனர்.

Seenu Ramasamy praises Minister Keerthana s Actions

அரசு பள்ளி மாணவி தான் நானும் என்று கீர்த்தனா மீண்டும் ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனா குறித்த கேள்விக்கு தான் அளித்த பதில் இதுதான் என சீனுராமசாமி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அமைச்சர் கீர்த்தனாவை அட்டாக் செய்யும் திமுக: தனியார் பள்ளிகளில் குறைவான சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும் ஆங்கிலத்தில் பேச வைக்கவும் முடியுமென்றால் அனைத்து தகுதிகளும் கொண்ட அரசு ஆசிரியர்களால் ஏன் அரசு பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த முடியாது என்கிற நோக்கத்துடன் அமைச்சர் கீர்த்தனா எடுத்த முன்னெடுப்புக்கு எதிராக எதிர்க்கட்சியான திமுக அரசியல் செய்து வருவதாக தவெகவினர் கூறி வருகின்றனர்.

அரசு பள்ளி மாணவியை அசிங்கப்படுத்திவிட்டார் கீர்த்தனா என அவரது ஆங்கில புலமை மீது கேள்வி எழுப்பி அமைச்சரையே அசிங்கப்படுத்தி வருகிறது திமுக என்கின்றனர். தானும் ஒரு அரசு பள்ளி மாணவி தான் அந்த வலியும் வேதனையும் எனக்குத் தெரியும். அதை மாற்றவே போராடுகிறேன் என கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.

லஞ்சம், ஊழல் துளியும் இல்லை: "நேற்றைய ஒரு பேட்டியில் அமைச்சர் கீர்த்தனா குறித்து என்னிடம் பத்திரிகை நண்பர் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

இதோ நான் சொன்ன பதில்:

மாண்புமிகு
​தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயல்பாட்டில் லஞ்சம், ஊழல் துளியும் இல்லை என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பாராட்டத்தக்கது.

அதே சமயம் அவரது அணுகுமுறையில் உள்ள சிக்கல்களை அவர்
இணைய தள விமர்சனங்களை கூர்மையாக கவனித்து
அதை அவர் காலப்போக்கில் சரிசெய்து கொள்வார் என நம்புகிறேன்." என சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X