Kanne Kalaimane : முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சாமியாடும் பெண்கள்.. ஆனால்!
கண்ணே கலைமானே படப்பாடலுக்கு பெண்கள் தியேட்டரிலேயே நடனம் ஆடும் வீடியோவை சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார்.
சென்னை: கண்ணே கலைமானே படத்தின் முதல் பாடலுக்கு தியேட்டரிலேயே சில பெண்கள் எழுந்து சாமியாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அப்பட இயக்குநர் சீனு ராமசாமி.
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடிப்பில் நேற்று வெளியான படம் கண்ணே கலைமானே. இயற்கை விவசாயியின் வாழ்க்கையில் நிகழும் சில சம்பவங்களின் தொகுப்புதான் இந்தப் படம்.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு சாமி பாடல் வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்துள்ள சாமி பாடல் என்பதால், தியேட்டரில் பெண்கள் பக்திப் பரவசமாக இந்தப் பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர்.
சாமியாட்டம்:
இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமியும் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தியேட்டர் ஒன்றில் அப்பாடலுக்கு பெண்கள் சிலர் எழுந்து சாமியாட்டம் ஆடுகின்றனர்.

சந்தேகம்:
ஆனால், இந்த வீடியோவில் ஒரு விசயத்தை சீனு ராமசாமி கவனிக்கத் தவறி விட்டார். பக்திப் பரவசத்தில் உண்மையாகவே அந்தப் பெண்கள் சாமி ஆடுகின்றனரா என்பது தான் அது. ஆரம்பத்தில் ஒரு பெண் மட்டும் ஆடுகிறார். அவரை சிலர் வீடியோ எடுக்கவும், உற்சாகமாக வேறு சிலரும் சாமியாட்டம் ஆடுகின்றனர்.

டக்கென அமர்ந்த பெண்கள்:
அப்போது தியேட்டர் ஊழியரா அல்லது தியேட்டருக்கு படம் பார்க்க வந்தவர்களில் ஒருவரா எனத் தெரியவில்லை. அவர் வந்து, ‘பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு படம் மறைக்கிறது' என்கிறார். அதைக் கேட்டதும் டக்கென சாமியாடும் பெண்கள் அமர்ந்து விடுகின்றனர்.

ரசிகர்கள் கேள்வி:
சீனு ராமசாமி பகிர்ந்த இந்தப் பதிவிற்கு மேற்படி விளக்கத்தை வைத்து ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். பட புரோமோசனுக்காக இப்படியா வீடியோ வெளியிடுவது, அந்தக் காட்சிகளை எடிட் செய்திருக்கக் கூடாதா என அவர்கள் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இது நியாயமா?
மேலும், தியேட்டரில் வீடியோ எடுப்பதே தவறு, அதை நீங்களும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளீர்களே இது நியாயமா என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். பலர் படம் நன்றாக இருப்பதாக சீனு ராமசாமிக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











