சம்பளப் பிரச்சினை.. ஹேர்ஸ்டைலை மாற்றிய பிரபல நடிகர்.. கொலை மிரட்டல் விடுத்த தயாரிப்பாளரால் பரபரப்பு!
ஹேர்ஸ்டைலை மாற்றியதால் தயாரிப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் ஷேன் நிகாம் புகார் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: ஹேர்ஸ்டைலை மாற்றியதற்காக ஹீரோவுக்கு இயக்குநர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம். இவர் சீனி ராமசாமி இயக்கத்தில் ஸ்பா படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
தற்போது ஷேன், ஜோபி ஜார்ஜ் தயாரித்து வரும் வெயில் என்கிற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிக்க அவருக்குச் சம்பளமாக ரூ 30 லட்சம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய பிறகு ஷேன் கூடுதல் சம்பளம் கேட்டதாகவும், அதனால் அவருக்கும் ஜோபிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

குர்பானி
கோபமடைந்த ஷேன், வெயில் படத்திற்காக வளர்த்திருந்த ஹேர்ஸ்டைலை மாற்றி விட்டு, குர்பானி என்ற வேறொரு படத்தில் நடிக்கப் போய் விட்டாராம். எனவே மேற்கொண்டு அவரால் வெயில் பட வேலைகள் பாதிக்கப்பட்டது. இதனால் ஜோபி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஷேன் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் புகார்
அதில், "இந்த ஹேர் ஸ்டலை ஜோபியிடம் கேட்டு தான் வைத்தேன் ஆனால் தற்போது படத்தின் கன்டினியூட்டி இருக்காது என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்" என ஷேன் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தப் புகாரை ஜோபி மறுத்திருக்கிறார். ‘நான் ஷேனுக்கு கொலை மிரட்டல் விடுக்கவில்லை' என அவர் விளக்கமளித்துள்ளார்.

மிரட்டல் ஆடியோ
இந்த விவகாரத்தை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என நடிகர் சங்கமும் கை விரித்து விட்டது. ஆனபோதும் இது தொடர்பாக சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார் ஷேன். ஜோபி தொலைபேசியில் தன்னை மிரட்டியதாக ஆடியோ ஒன்றையும் அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் ஹீரோ பிரச்சினை
இந்த விவகாரம் மல்லுவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேர் ஸ்டைலை மாற்றியதற்காக தமிழிலும் இதே போன்று பிரபல நடிகர் ஒருவர் பிரச்சினையில் சிக்கியது இங்கே நினைவு கூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











