மனிஷா யாதவ் என்னால சினிமா விட்டு போனாங்களா?.. பிஸ்மி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த சீனு ராமசாமி!

சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி பார்க்கத்தான் நல்ல மனிதர் என்றும் மாமனிதன் டைட்டிலில் படத்தை வெளியிடும் அவர் உண்மையில் மிகவும் மட்டமான மனிதர் ரேஞ்சுக்கு அவர் மீது பகீர் குற்றச்சாட்டை வலைப்பேச்சு பிஸ்மி நேற்றைய வீடியோவில் முன் வைத்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை.

Seenu Ramasamy says big no to Manisha Yadav abuse allegation raised by Bismi

அந்த படத்தின் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்ற இடத்தில் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகவும் அதன் காரணமாகவே சினிமாவை விட்டு மனிஷா யாதவ் ஒரேயடியாக விலகினார் என்றும் பகீரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

மனிஷா யாதவ் அமைதி: இந்த விவகாரத்தில் இதுவரை நடிகை மனிஷா யாதவ் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். பிஸ்மி சொன்னது உண்மையா? அல்லது பொய்யா? என்பதற்கு அவர் இன்னமும் விளக்கம் அளிக்கவில்லை. காதல் படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, ஆதலால் காதல் செய்வீர், ஒரு குப்பைக் கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

சீனு ராமசாமி விளக்கம்: "வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார்.. ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க.. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க.. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க... இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்." என விளக்கம் கொடுத்து மனிஷா யாதவ் ஒரு குப்பைக் கதை ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

Seenu Ramasamy says big no to Manisha Yadav abuse allegation raised by Bismi

நன்றி தெரிவிக்கும் மனிஷா: அந்த வீடியோவில் சீனு ராமசாமிக்கு மனிஷா யாதவ் நன்றி தெரிவிக்கும் காட்சிகள் மட்டும் இடம்பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருந்தால் எப்படி நன்றி தெரிவிப்பார் எனக் கேட்டு சீனு ராமசாமி இந்த பதிவை போட்டுள்ளார். இது தொடர்பாக மனிஷா யாதவ் கருத்து தெரிவிப்பாரா? பிஸ்மி மீது சீனு ராமசாமி என்ன நடவடிக்கை எடுப்பார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X