For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலு மகேந்திரா சொத்துக்கு யார் பொறுப்பு? - இயக்குநர் சீனு ராமசாமி

  By Shankar
  |

  பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்தகால நதிகளிலே' நூல் வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. கவிஞர் முத்துலிங்கம் நூலை வெளியிட்டார். இயக்குநர்கள் சீனுராமசாமியும் கரு.பழனியப்பனும் பெற்றுக் கொண்டார்கள்.

  தேனி கண்ணன் இந்நூலில் ஒரு பத்திரிகையாளராக தான் சந்தித்த பிரபலங்கள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

  Seenu Ramasamy speaks on Balu Mahendra property issue

  விழாவில்இயக்குநர் சீனுராமசாமி பேசும் போது-" நான் ஒரு கரப்பான் பூச்சிமாதிரி. வெளியே வருவதில்லை .இது மாதிரி கூட்டங்களுக்கெல்லாம் வெளியே வருவதில்லை

  இந்த தேனி கண்ணன் பிறந்தது தஞ்சாவூரில் ஆனால் தன்னை தஞ்சை கண்ணன் என்று அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. தன்னை வளர்த்த ஊரான தேனியை சொந்த ஊராக ஆக்கிக் கொண்டவர். பிறந்த ஊர் ஞாபகம் என்பது பால்யத்தில் இருப்பது. ஆனால் சொந்த ஊர் நம்மை சாதியாகப் பார்க்கிறது. மதமாகப் பார்க்கிற து. குடும்பம் பொருளாதரத்தை மையமாக வைத்துப் பார்க்கிறது. வளர்ந்த ஊர் அப்படிப்பார்க்காது.எனக்கு சொந்த ஊர் என்றால் இனி அது சென்னைதான். . சென்னைதான் என்னை வளர்த்த ஊர்.

  இந்நூலில் பாடல்கள் பற்றி எழுதியிருக்கிறார். பழைய பாடல்கள் ஏன் பிடிக்கின்றன? சில பாடல்கள் பிடிக்கும் நிறைய கேட்டிருப்போம். ஆனால் அதை எழுதியவர் யாரென்று தெரியாது. இளையராஜா பாடல் கேட்டு வளர்ந்தவர்கள் நாம்.. காலையில் ராஜா பாடல், இரவு தூங்கும்வரை ராஜா பாடல் தான்.

  குருவிக்கு தானியம் போல இசைஞானியின் பாடல்கள் தமிழர்களுக்கு.. அவை ஒவ்வொரு பாட்டுக்கும் பின்னாலும் வாழ்வின் அனுபவம் இருக்கும். எல்லாப் பாடல்களுமே நம் நினைவின் தடத்தில் உள்ளன.

  அவரது பாடல்கள் சாமான்யனின் வாழ்விலும் ஒலிக்கின்றன. ‘புள்ளி போட்ட ரவிக்கைக் காரி' என்றுபாடல் ஒலித்ததும் இன்றும் கூட அப்படியே நின்று விடுகிறேன்.

  நம் வாழ்வின் நினைவுத் தடம் அவர் பாட்டில் இருக்கிறது. காலையில் நடக்கும் போதும் இரவு உறங்கும் போதும் அவர் பாடல்கள் தேவைப்படுகிறது.

  இந்நூலில் பலரைப் பற்றியும் எழுதியுள்ளார். பிரபலமானவர்கள் பலரது நல்ல பண்புகளை நல்லியல்புகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். பாலு மகேந்திரா பற்றி எழுதியிருக்கிறார். இயக்குநரான அவரது உதவியாளர்களைச் சந்திக்க முடியவில்லையே என எங்கள் மீது கேள்விகள் வைக்கப் படுகின்றன. என்னை எப்போதும் சந்திக்கலாம்.

  அவரது சினிமா பட்டறை அவரது சிஷயர்களால் அடுக்கு மாடிக் கட்டடமாக ஆகப் போகிறதாமே ? என்று எழுதியிருக்கிறார். நாங்கள் அவரது கலைக்குத்தான் வாரிசு. அவரது கனவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆனால் பாலுமகேந்திரா சொத்துக்கு யார் வாரிசு? அவர் சொத்துக்கு நான் வாரிசல்ல... அவர் சொத்துக்கு உரிமையுள்ளவர்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்....," என்றார்.

  இயக்குநர் கரு. பழனியப்பன் பேசும் போது " எழுத்தின் மீது மயக்கம் உள்ளவர்கள்தான் பத்திரிகைக்கு வருவார்கள். அப்படிப் பட்டவர்தான் தேனி கண்ணன். இந்த நூல் முயற்சி நல்லமுயற்சி பிரபலங்கள் பற்றி அவர்களது இன்னொரு பக்கம் பற்றி இதுமாதிரி நூல்களால்தான் நாங்கள் தெரிந்து கொள்ள முடிவும்," என்றார்.

  விமர்சகர் விஜய் மகேந்திரன், "செய்தியை தேனி கண்ணன் உணர்வாக மாற்றியுள்ளார்," என்று கூறியவர், பலகட்டுரைகள் பற்றி பகிர்ந்தார்.

  பத்திரிகையாளர்கள் ஷங்கர் மற்றும் சுந்தர புத்தன் நட்புரையாற்றினர்.

  கவிஞர் முத்துலிங்கம் பேசும் போது" தேனி கண்ணன் அன்பில் நிறைகுடம் பண்பின் உறைவிடம் " என்றவர் தாங்கள் அறிமுகம் ஆனது தொடங்கி பாடல் எழுதிய பழைய அனுபவங்களில் மூழ்கிப் பேசிய போது கலகலப்பூட்டி அவைவரையும் சிரிக்க வைத்தார்.

  பாடல் எழுத பட்ட பாடுகள் சந்தித்த சிக்கல்கள் பற்றியெல்லாம் கூறிய போது எல்லாருமே விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

  பொதுவாக நூல் வெளியீட்டு விழா, இலக்கிய விழாக்கள் இப்படி கலகலப்பாக அமைவதில்லை.

  நிறைவாக நூலாசிரியர் தேனி கண்ணன் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தினகரன் ஏக்நாத், தமிழ்முரசு மீரான், ரவிஷங்கர், வி.கே.சுந்தர், பிஆர்ஓ யூனியன் தலைவர் டயமன்ட் பாபு, முன்னாள் தலைவர் நெல்லை சுந்தரராஜன் என ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் நன்றியுரையாற்றினார். ரோகிணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

  English summary
  In a book release function, director Seenu Ramasamy speaks on Balu Mahendra property issues.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X