சமூகக் கோபம்.. கலாநேர்த்தி கொண்டவர் இயக்குநர் பாலா.. பிரபல இயக்குநர் இப்படி வாழ்த்தியிருக்காரே!

சென்னை: இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநர் பாலாவுக்கு இன்று பிறந்தநாள்.

சேது, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தார தப்பட்டை என வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவில் இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ஆளுமை கொண்டவர் இயக்குநர் பாலா.

இயக்குநர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபல இயக்குநரான சீனு ராமசாமி ட்வீட் போட்டு சூப்பராக வாழ்த்தி உள்ளார்.

பாலா பிறந்தநாள்

பாலா பிறந்தநாள்

தேனி சின்னமனூரில் பிறந்த இயக்குநர் பாலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் பாலாவை பாடலாசிரியர் அறிவுமதி அறிமுகப்படுத்தினார். பாலுமகேந்திராவின் பரம சீடனாக மாறிய பாலா 1999ம் ஆண்டு சேது படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தேசிய விருதுகள்

தேசிய விருதுகள்

இயக்குநர் பாலா படம் இயக்கினாலே தேசிய விருது பார்சல் என்பது போலத் தான் அந்த படங்கள் இருக்கும். அறிமுகப் படமான சேது படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. பிதாமகன் படத்தில் நடிகர் சியான் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது.

சமூகக் கோபம்

சமூகக் கோபம்

இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், பேரன்பு, அறச்சீற்றம், சமூகக் கோபம், கலா நேர்த்தி, பாத்திரங்களில் வாழ்வுணர்ச்சி, 'இயக்குனர் பாலா' அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.. என பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

குவியுது வாழ்த்து

குவியுது வாழ்த்து

இயக்குநர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வர்மா படத்தின் சறுக்கலுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் பாலா தனது ஸ்டைலில் எழுந்து வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X