சீனு ராமசாமி சேர்த்து வைத்த டிக்கெட்டுகள்.. செம போஸ்ட்

சென்னை : இயக்குனர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். இவர் தேசிய விருது வென்ற இயக்குனரும் கூட. கிராமத்து படங்களை எடுத்து வரும் இயக்குனர் சீனு ராமசாமி தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தவர்.

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவின் பல சீடர்களில் இவரும் ஒருவர்.பாலு மகேந்திரா உதவி இயக்குனர்கள் அனைவருமே ஒரு தனி சிறப்பு மிக்கவர்கள் என்று சொல்லலாம் . சீனு ராமசாமி 2007ல் வெளிவந்த கூடல் நகர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .பரத் பாவான நடித்த அந்த படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்றது .

seenu ramasamy theatre tickets

அதற்கு பிறகு இவர் இயக்கிய 'தென்மேற்கு பருவ காற்று' படம் நல்ல வரவேற்பை பெற்றது ,அதன் பின் இந்த படத்திற்காக மூன்று தேசிய விருதுகள் வழங்க பட்டது ,இதில் இயக்குனர் சீனு ராமசாமிக்கு சிறந்த இயக்குனர்கான தேசிய விருது கிடைத்தது .மேலும் இந்த படத்தில் நடித்த நடிகை சரண்யாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது .

அதன் பின் இவர் உதயநிதி தயாரிப்பில் விஷ்ணு விஷால் சுனைனாவை வைத்து 'நீர் பறவை' என்ற படத்தை இயக்கினார். மீனவர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்க பட்ட இந்த படம் பலரால் பாராட்டபட்டு வியாபார ரீதியிலும் நல்ல வெற்றியை பெற்றது .இந்த தரமான படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுக்கபட்டது தொடர்பான பிரச்சனை பலரால் அந்த சமயத்தில் பேசப்பட்டது .இந்த தரமான படத்திற்கு படக்குழு சார்பில் யூ சான்றிதழ் கேட்கபட்டது. ஆனால் தணிக்கைகுழுவிடம் இருந்து யூ/ஏ சான்றிதழே கிடைத்தது .

அதன் பின் இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷாலை வைத்து இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் இடம் பொருள் ஏவல் படத்தை இயக்கினார் அந்த படம் பல பிரச்சனைகளால் இன்று வரை வெளிவரவில்லை. மீண்டும் விஜய் சேதுபதியை வைத்தே தர்மதுரை படத்தை இயக்கினார்.

seenu ramasamy theatre tickets

இந்த படத்தில் தமன்னா ,ஜஸ்வர்யா ராஜேஷ் ,ஸ்ருஸ்டி ஆகிய கதாநாயகிகளும் நடித்து இருந்தனர் .இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது .விஜய் சேதுபதி மார்கெட் மிக பெரிய அளவில் உயர இந்த படம் முக்கிய காரணமாக இருந்தது .இந்த படத்தில் வரும் 'எந்த பக்கம்' பாடல்வரிகளை எழுதிய வைரமுத்துக்கு தேசிய விருது கிடைத்தது .

இதற்கடுத்து இறுதியாக உதயநிதி மற்றும் தமன்னாவை வைத்து 'கண்ணே கலைமானே' படத்தை இயக்கி இருந்தார்.இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கடுத்து தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார் சீனு ராமசாமி.

சீனு ராமசாமி ட்விட்டரில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்து திரிந்த போது பல படங்களை பல திரையரங்குகளில் பார்த்திருப்பார், அந்த திரையரங்குகளில் வாங்கிய டிக்கெட்டுகளை சேர்த்து வைத்து தற்போது போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி எம்மை வளர்த்த மதுரை முகவரிகள் என்று பதிவிட்டு உள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X