விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' ரிலீஸ் பற்றி சொல்ல அதிகாரமில்லை.. இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்!

By

சென்னை: மாமனிதன் படத்தின் ரிலீஸ் எப்போது என்பதை தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும்' என்று கூறியுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.

Recommended Video

Master & Cobra Release Date • Exclusive Update | Thalapathy Vijay Vikram

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று, விஷ்ணு நடித்த நீர்பறவை, விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை, உதயநிதி, தமன்னா நடித்த கண்ணே கலைமானே உட்பட சில படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.

seenu Ramasamy tweet about Mamanithan release

இப்போது, விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், ஷாஜி சென் உட்பட பலர் நடித்துள்ள மாமனிதன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜாவுடன் இணைந்து அவர் இசை அமைக்கிறார்.

மாமனிதன் படத்தின் ஷூட்டிங், கடந்த 2019-ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. அதற்குப் பிறகு இந்தப் படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

seenu Ramasamy tweet about Mamanithan release

இந்நிலையில் இந்தப் படம் பற்றி இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் கூறியுள்ளார். அதில், மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசைப் பணியை இசைஞானி இளையராஜா முடித்து விட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு அரேஜ்மென்ட்ஸ் செய்து கொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை' என்று கூறியுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, நடித்துள்ள 'இடம் பொருள் ஏவல்' படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் லாக்டவுனுக்குப் பிறகு ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X