விஜய்சேதுபதியின் அடுத்த படமும் சீக்கிரம் ரிலீஸ் ஆகுதாம்.. அட்டகாச அப்டேட் கொடுத்த இயக்குநர்!

சென்னை: நடிகர் விஜய்சேதுபதியின் மாமனிதன் விரைவில் வெளியாகப் போவதாக இயக்குநர் சீனு ராமசாமி தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

விஜய்சேதுபதி நடிப்பில் இந்த மாதம் மூன்று படங்கள் வரிசையாக வெளியாகின.

ஆனால், ஒன்று கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்த நிலையில், மாமனிதன் விஜய்சேதுபதிக்கு கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

குரு சிஷ்யன் உறவு

குரு சிஷ்யன் உறவு

இயக்குநர் சீனு ராமசாமிக்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கும் இடையே உள்ள உறவு என்பது குரு சிஷ்யன் உறவு என பல மேடைகளில் விஜய்சேதுபதியே வெளிப்படையாக கூறியுள்ளார். விஜய்சேதுபதியை வைத்து மண் சார்ந்த தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் சீனு ராமசாமி.

தேசிய விருது

தேசிய விருது

2010ம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, வசுந்தரா, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றது. அந்த படம் தான் விஜய்சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

தர்மதுரை

தர்மதுரை

மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சீனுராமசாமியுடன் விஜய்சேதுபதி கைகோர்த்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை.

மீண்டும் இணைந்து

மீண்டும் இணைந்து

இந்நிலையில், மீண்டும் மாமனிதன் படத்தில் அதே வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றி உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் விஜய்சேதுபதி உடன் இணைந்து நடித்த காயத்ரி நடித்துள்ளார்.

ஆட்டோக்காரர்

ஆட்டோக்காரர்

பாட்ஷா படத்தில் ஆட்டோ ஓட்டுநராக ரஜினிகாந்த் நடித்து அசத்திய நிலையில், மாமனிதன் படத்தில் விஜய்சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகப் போவதாக தொடர்ந்து இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.

வடிவேலு நடிக்க வேண்டிய படம்

வடிவேலு நடிக்க வேண்டிய படம்

"#மாமனிதன் படத்தின் கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி "மேட்டர் ஹெவியா இருக்கே"என்றார். பிரபுதேவா கண்கலங்கினார் ஹிந்தி படத்தால் அவர் வர இயலவில்லை. மம்மூட்டி இசைந்தார் ஆனால் ஈடேரவில்லை. முடிவில் வந்தது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மிக அருகில் நல்ல சேதி." என முதலில் ட்வீட் போட்டிருந்த நிலையில், இன்னொரு ட்வீட்டையும் தட்டி விட்டிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. சீக்கிரமே விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது.

Recommended Video

Annabele Sethupath Movie Review | Poster Pakiri | Filmibeat Tamil
அடுத்த மாத லிஸ்ட்

அடுத்த மாத லிஸ்ட்

இந்த மாதம் விஜய்சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி என மூன்று படங்கள் வெளியான நிலையில், அடுத்த மாத லிஸ்ட்டில் மாமனிதன் படம் இடம்பெறுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், விக்ரம் உள்ளிட்ட பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X