மாமனிதன் படத்திற்கு அடுத்த வாரத்தில் சென்சார்... அப்டேட் தெரிவித்த டைரக்டர்
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.
சீனு ராமசாமி இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் 37 நாட்களில் நிறைவடைந்துள்ளது.
விரைவில் ரிலீசாக உள்ள இந்தப் படம் அடுத்த வாரத்தில் சென்சார் செய்யப்பட உள்ளது.

மாமனிதன் படம்
நடிகர் விஜய் சேதுபதி டைரக்டர் சீனு ராமசாமியுடன் 3வது முறையாக இணைந்துள்ள படம் மாமனிதன். இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் காயத்ரி.

யுவன் தயாரிப்பு
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இசைஞானி இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிக்க முன்னதாக வடிவேலு, பிரபுதேவா மற்றும் மம்முட்டி ஆகியோரிடம் சொன்னதாகவும் இறுதியில் விஜய் சேதுபதியிடம் கதையை சொல்லி ஒப்பந்தம் செய்ததாகவும் முன்னதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

தள்ளிப் போன ரிலீஸ்
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முழு முயற்சி மேற்கொண்டுள்ளனர். அடுத்த வாரத்தில் படம் சென்சாருக்கு போக உள்ளதாக படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

விரைவில் ரிலீஸ்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 37 நாட்களில் இந்தப் படம் உருவானதாக தெரிவித்துள்ளார். மேலும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துடன் இணைந்து தானும் எடிட்டிங் பணியை நிறைவு செய்துள்ளதாகவும் விரைவில் படம் திரைத்தொட காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த வாரத்தில் சென்சார்
அடுத்த வாரத்தில் படம் சென்சாருக்கு போக உள்ளதாகவும் அவர் மேலும் அப்டேட் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பாடலை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டிருந்தார். அந்தப் பாடல் மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

3வது முறையாக இணைந்த கூட்டணி
முன்னதாக தென்மேற்கு பருவக்காற்று மற்றும் தர்மதுரை ஆகிய படங்களில் சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி இணைந்து பணியாற்றிய நிலையில், மாமனிதன் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











