“சீறு“ கமர்ஷியல் ஹிட்.. குடும்பங்கள் கொண்டாடும் படம்… ஹேஷ்டேக் வெளியிட்ட வேல்ஸ்!

Recommended Video

சீறு’.. பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா? |Seeru| Jiiva | Riya Suman | D.imman | Rathna Siva

சென்னை : சீறு படம் இரண்டாம் வாரத்தை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது. சீறு கமர்ஷியல் ஹிட் என்ற ஹாஸ்டேக்கை வேல்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி இருக்கும் படம் தான் சீறு. வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கும் இந்த படம் மக்களின் பேராதரவை பெற்றிருக்கிறது.

 “Seeru“ becomes commercial hit movie vels releases hashtag!

படத்தில் ஜீவா, ரியா சுமன், காயத்ரி கிருஷ்ணா, நவ்தீப், வருண், சதீஷ் மற்றும் சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சீறு படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார் .

சீறு படம் ஐசரிகணேஷ் தயாரித்துள்ள படம், இதற்கு முன்பு இவர் தயாரித்த அத்தனை படங்களும் கமர்ஷியலான வெற்றியை பதிவு செய்த படங்கள். அந்த வரிசையில் சீறு படமும் இணைந்திருக்கிறது .

 “Seeru“ becomes commercial hit movie vels releases hashtag!

தற்போது சீறு படம் தனது இரண்டாம் வாரத்தை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் திரையரங்கில் இருந்து வெளியே வரும் மக்கள் படத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்றனர் .

இந்த காணொளிகளை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறது வேல்ஸ் நிறுவனம். இதில் கமர்ஷியல் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படம் என கூறபட்டுள்ளது. முக்கியமாக பெண்கள் இந்த படத்திற்கு அதிகபடியான ஆதரவை தெரிவித்து இருப்பது தெரிகிறது .

 “Seeru“ becomes commercial hit movie vels releases hashtag!

தற்போது ட்விட்டரில் வேல்ஸ் நிறுவனம் பகிரும் ட்விட்களிலும் சீறு படத்தை பற்றி பேசும் யாராக இருந்தாலும் தவறாமல் சீறு கமர்ஷியல் ஹிட் என்ற ஹாஸ்டேக்கையும் சேர்த்து பதிவிட்டு வருகின்றனர் . பல இணைய விளம்பரதாரர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் சீறு படத்தின் ஹாஸ்டேக்கை பயன்படுத்தியே படத்தின் வெற்றியை பற்றி பேசி வருகின்றனர்.

சீறு படம் தனது இரண்டாவது வார்த்தை வெற்றி கரமாக கடக்கும் நிலையில் படம் தொடர்பான ஹாஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாவது படக்குழுவிக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.மேலும் பல ரசிகர்களும் இந்த ஹாஸ்டேக்கை பதிவேற்றி சீறு வெற்றியை உறுதி செய்து வருகின்றனர் .

நடிகர் ஜீவாவிற்கு கம்பேக் படமாக சீறு படம் அமைந்திருப்பதால் ட்விட்டர் வாயிலாகவும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சீறு படம் கம்ர்ஷியலாக வெற்றி அடைந்திருப்பதை போஸ்டர்களின் மூலம் சில ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X