“சீறு“ படம் செம வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
Recommended Video
சென்னை : "சீறு" படம் வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜீவா நடிப்பில் ரத்ன சிவா இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜசரி கணேஷ் தயாரித்து கடந்த 7ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் சீறு.

இப்படம் சுமார் 400 திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு மிகப் பெரிய ஒப்பனிங் கிடைத்தது படம் சென்டிமெண்ட் கலந்த ஒரு ஆக்சன் திரைப்படம் என்பதால் பலரும் இப்படத்தை பார்த்து ரசித்தனர்.
படத்தை பார்த்த அனைவரும் கூறியது, ஜீவாவின் நடிப்பு தான் ராம், கற்றது தமிழ் படத்திற்கு பிறகு ஒரு வித்தியாசமான நடிப்பு ஜீவாவிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அண்ணன் தங்கை பாசத்தை தனது நடிப்பால் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார் இதுவே பலருக்கும் படத்தை பிடிக்க ஒரு முக்கிய காரணமாக மாறியது.

இப்படம் வெற்றிக்கு இயக்குனர் ரத்ன சிவா ஒரு முக்கிய காரணம். பல காட்சிகளை இவர் காட்சி படுத்திய விதம் சூப்பராக இருந்தது என்று பல ரசிகர்களும் கூறி வருகின்றனர். ரத்ன சிவா இதற்கு முன்பு விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய றெக்க திரைப்படம் அக்கா சென்டிமெண்ட் சீறு திரைப்படம் தங்கச்சி சென்டிமெண்ட். தனது படங்களால் பலரையும் கவர்ந்து வருகிறார் இயக்குனர் ரத்ன சிவா.

படத்திற்கு பிளஸ் டி. இமானின் இசை தான் பின்னணி இசையில் கலக்கி உள்ளார் டி. இமான். ரத்ன சிவாவும் டி. இமானும் இதற்கு முன்பு இணைந்த றெக்க படத்தில் வரும் கண்ணம்மா பாடலை போல இந்த படத்தில் வரும் செவ்வந்தியே பாடல் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
முதல் முறையாக வில்லனாக நடித்த வருணை பலரும் பாராட்டி வருகின்றனர். வில்லனுக்கு ஏற்ற நடை உடை பாவனை என அனைத்தும் இவரிடம் இருந்தது என்று கூறினர் வில்லனாக வருண் பாஸ் ஆகிவிட்டார்.

படம் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றதை அடுத்து சீறு படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஒட்டுமொத்ததில் சீறு காளை போல சீறி வெற்றி பெற்றுவிட்டது. கேக் வெட்டி கொண்டாடிய தருணத்தில் படத்தின் எக்ஸ்சிக்குடிவ் ப்றடூஸர் அஸ்வின் இவர்களுடன் சேர்ந்து பல போட்டோக்கள் எடுக்கப்பட்டது. படத்தின் கதாநாயகன் ஜீவா அழகான ஒரு நீண்ட பூ மாலையுடன் எல்ல போட்டோக்களுக்கும் போஸ் கொடுத்தார். இயக்குனர் ரத்தின சிவாவின் பக்க பலமாக இருந்த அனைவரும் உடன் இருந்தனர். இணை இயக்குனர் சாமிநாதன் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் பல வெற்றி படங்களை இந்த கூட்டணி கொடுக்கும் என்பது நிரூபணமாகி உள்ளது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் செய்யும் பல சாதனைகளில் சீறு பட வெற்றியும் ஒரு பெரிய சாதனை தான்.


Click it and Unblock the Notifications











