படத்தோட பெரிய ப்ளஸே அதுதான்.. இரண்டாவது நாளாக ரசிகர்களின் பாராட்டு மழையில் சீறு!
Recommended Video
சென்னை: ஜீவாவின் சீறு படத்தை இரண்டாவது நாளாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இயக்குநர் ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சீறு. அண்ணன் தங்கை பாசம் மற்றும் நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உள்ளது என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் படக்குழு தொம்பாக உள்ளது. அதேநேரத்தில் படத்திற்கு இமானின் இசை பக்கபலமாக உள்ளது என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
சமூக செய்தி
இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் படத்திற்கு பெரிய பலமே படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டைக்காட்சிகள்தான் என தெரிவித்துள்ளனர். மேலும் படத்தில் சமூகத்திற்கு தேவையான கருத்து இருப்பதாகவும் பாராட்டியிருக்கின்றனர். சீறு படம்
இறுக்கமான திரைக்கதையுடன் வலுவான சமூக செய்தியை வழங்கியிருப்பதால் பாராட்டை பெற்றுள்ளது என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
செமயா இருக்கு
இமான் இசை படத்தில் நன்றாக வேலை செய்திருக்கிறது. படத்தில் அறிமுக பாடலை விடம் வா வாசுகி பாடல்தான் ரொம் இம்ப்ரஸ் பண்ணுச்சு.. ஒட்டுமொத்தமாக நல்ல கமர்ஷியல் படம் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன். ஜீவா, வருண் தொடர்பான காட்சிகள், அவங்க முதலில் போனில் பேசும் காட்சியிலிருந்து அப்புறம் ஜீவா வருணுக்காக ஃபைட் பண்ற வரை எல்லாமே செமயா இருக்கு என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
பெரிய ப்ளஸ்
சீறு.. ஆக்ஷன் பிளாக்ஸ் படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ்.. அந்த இன்ட்ரோ சீன் ஃபைட் இன்டர்வல் ஃபைட் எல்லாம் அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு.. அதுவும் இரண்டாம் பாதயில் போன் பூத்ல கார்குள்ள இருக்கும் போது ஆரம்பிக்கிற ஃபைட்.. என புகழ்ந்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
படக்குழு மகிழ்ச்சி
சீறு - நல்ல கமர்ஷியல் படம். ரத்ன சிவாவுக்கும் ஜீவாவுக்கும் இது ஒரு நல்ல படம். ஜீவா அசத்தியிருக்கார். வருணுக்கும் நல்ல கேரக்டர். சென்டிமென்டல் சீன்ஸ் எல்லாம் ஓரளவுக்கு வேலை செய்திருக்கிறது. இமான் மியூஸிக்கும் நல்லாருக்கு.. மொத்தமாக நல்ல டைம் பாஸ்.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். படத்திற்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிவதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











