என்ன அண்ணன்னு ஆசையா கூப்பிட்டாலே அழுதுருவேன்.. டிவிட்டரை தெறிக்கவிடும் சீறு போஸ்டர்! #Seeru
Recommended Video
சென்னை: சீறு படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் ஜீவாவின் நடிப்பில் நேற்று வெளியான படம் சீறு. இந்த படத்தை இயக்குநர் ரத்ன சிவா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்திருக்கிறார்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் படம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஜீவா நடிப்பில் அண்மைக் காலமாக வெளியான படங்கள் பெரிய அளவில் கைகொடுக்காத நிலையில் சீறு படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக படத்தில் ஜீவா முற்றிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்த ஒரு போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகமே படத்தின் கதையை சொல்லிவிடும்.
அதாவது ஜீவாவும் அவரது தங்கையும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளனர். தனது தங்கையை பார்த்து "என்ன அண்ணன்னு ஆசையா கூப்பிட்டாலே அழுதுருவேன்" என ஜீவா சொல்வதாக உள்ளது. சீறும் வெற்றி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் என்ற விமர்சனங்கள் எழுந்து வருவதால் இந்த வீக்கென்டில் படம் எதிர்பார்த்த அளவுக்கு கல்லா கட்டும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











