சீறு.. சீறும் வெற்றி.. இரண்டாவது வாரமாய் கொண்டாடும் நெட்டிசன்ஸ்.. ஹேப்பி மோடில் படக்குழு!
Recommended Video
சென்னை: சீறு படம் இரண்டாவது வாரமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.
ஜீவாவின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் சீறு. நடிகர் ஜீவாவுக்கு கோ படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான எந்தப் படமும் அந்தளவுக்கு கை கொடுக்கவில்லை.

இதனால் வெற்றி படத்தை கொடுத்து நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ஜீவா. இந்நிலையில் நடிகர் ஜீவா இயக்குநர் ரத்ன சிவா கூட்டணியில் உருவான படம் தான் சீறு.
இந்த படத்தை வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். அண்ணன் தங்கை பாசம், நட்புக்கு மரியாதை என கலக்கியிருக்கிறார் ஜீவா. ஜீவாவுக்கு போட்டியாக நடிப்பில் பின்னியிருக்கிறார் நடிகை நந்தினி.
இதேபோல் வில்லனாக நடித்திருக்கும் வருணும் மிரட்டியிருக்கிறார். சீறு படம் நல்ல ஃபேமிலி என்டெர்டெய்னராக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது வாரமும் ரசிகர்களின வரவேற்பை பெற்றுள்ள சீறு பாக்ஸ் ஆபிசிலும் முதலிடத்தில் உள்ளது.
இதனால் படக்குழு மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. இந்நிலையில் சீறு, சீறும் வெற்றி என்ற போஸ்டர்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications











