ம‌க்க‌ளி‌ன் பேராதரவுடன்.. வெற்றிகரமான இரண்டாவது வாரத்தில்.. ''சீறு''!

Recommended Video

SEERU MOVIE POSTER PAKIRI REVIEW | FILMIBEAT TAMIL

சென்னை : "சீறு" படம் ம‌க்க‌ளி‌ன் பேராதரவுடன் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் ஓடிக்கொண்டுள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் ரத்னசிவா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் சீறு. இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் தயாரித்து இருக்கிறார். படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார்.

படத்தில் ஜீவா, ரியா சுமன், காயத்ரி கிருஷ்ணா, நவ்தீப்,வருண், சதீஷ் மற்றும் சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர்.
தற்போது சீறு படம் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளதை அடுத்து மக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

 ஆக்சன் ரசிகர்களுக்கு

ஆக்சன் ரசிகர்களுக்கு

மேலும் அதிலிருந்து சில விசயங்கள் படம் பார்க்காத மற்ற மக்களுக்கும் சென்று சேர வேண்டும் . இந்திய ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் அதிகம் கொண்டாடுவது ஆக்சன் படங்களை தான். அப்படி அவர்களுக்கு விருந்து வைத்திருக்கும் ஒரு படம் தான் சீறு இதனால் ஆக்சன் படங்களை ரசிக்கும் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் சீறு .

 குடும்பத்துடன் கொண்டாட்டம்

குடும்பத்துடன் கொண்டாட்டம்

சீறு படம் ரத்னசிவா இயக்கத்தில் சிறந்த குடும்பங்கள் கொண்டாடும் படமாக வந்திருக்கிறது, அவர்களுக்கான சென்டிமென்ட், டிராமா மற்றும் ஆக்சன் என அனைத்தும் இருக்கிறது. படம் பார்த்துள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள் குடும்பம் குடும்பமாக சீறு படத்தை பார்த்துள்ளனர்.

 பெண்களுக்கான படங்கள்

பெண்களுக்கான படங்கள்

தற்போது தமிழ் சினிமாவில் அதிகபடியான பெண்கள் பற்றிய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் முக்கிய படமாக சீறு இடம் பெற்றுள்ளது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்கள் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார்கள் போன்ற உணர்ச்சிமிகுந்த காட்சிகள் படத்தில் ஏராளம். படத்தில் ஜீவா உதவி முதுகில் இருக்கும் மச்சம் போல யாராலும் பார்க்க முடியவில்லை என்றாலும் அது நம்முடனே தான் இருக்கும் என்பார்.

 உதவி செய்யப் போய்

உதவி செய்யப் போய்

அதே போல கதையிலும் ஜீவா ஓர் உதவி செய்ய போய் அவருக்கு பிரச்சினை ஆரம்பிக்கும் அவர் வெற்றி பெறுவதற்கும் பல உதவிகளே காரணமாக இருக்கும். இதன் மூலம் உதவி செய்யுங்கள் எனும் நல்ல கருத்தையும் பதிவு செய்திருக்கிறார் ரத்னசிவா. டி.இமானுக்கென ரசிகர்கள் ஏராளம் அவரின் இசை பிரியர்களுக்கு இந்த படம் ஒரு விருந்து. டி.இமான் அமைத்ததில் சிறந்த பின்னணி இசைகளில் இந்த படத்தின் பின்னணி இசையும் இடம் பெற்றிருக்கிறது.

 அருமையான இசை

அருமையான இசை

படத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணம் டி.இமானின் இசைதான் . சீறு படம் ஐசரிகணேஷ் தயாரித்துள்ள படங்கள் வரிசையில் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் படத்தில் ஆக்சன், சென்டிமென்ட் , காதல், காமெடி என அனைத்தும் மக்களை கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல திரையரங்குகளில் இரண்டாம் வாரத்திலும் மக்கள் கூட்டம் வெகுவாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X